உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

66

266

L

❖LDMMLDMOLD-14 →

.

தமையனையும் உற்றுப் பார்த்துப் பின்னும் வியப்புடையவராய் ‘ஆம், உனக்கு இவள் தங்கையாக இருக்கலாம். உங்கள் இருவர் முகமும் ஒரே அச்சில் வார்க்கப்பட்டனபோல் அவ்வளவு ஒத்திருக்கின்றன! ஆனால், உங்களிருவர்க்கும் இந்தக் கொடியவன் தந்தை என்பதை நான் எப்படி நம்புவேன்!” என்று சொல்லிப், பிறகு அந்தப் பாரசிக அம்மையாரை நோக்கிக் “கமலா, இவர்கள் இருவரும் உன் மக்களைப்போற் காணப்படு கின்றார்களே!” என்றார். அந்த அம்மையார் “அப்பா, இவர்களை என் மக்களினும் மேலாகவே கருதியிருக்கின்றேன். ஆனாலும், இவ்விருவரையும் நான் பிள்ளைகளாகப் பெறும் நல்வினை செய்திலேன்! இங்கே இறந்து கிடப்பவர் தாம் இவ்விருவர்க்குந் தந்தையார்!” என்று துயரத்தோடும் மொழிந்தார். இதற்குள் அந்தப் பாரசிகப் பெருமான் அப்பெரியவரை நோக்கிப் “பெரியய்யா, இவங்க ரெண்டு பேரும் அவரிக்கிப் பிள்ளைங்கதான்!” என்றார். இங்ஙனம் யாங்கள் கூறியவற்றை யெல்லாங் கேட்டு ஒன்றுந் தோன்றதவராய் வியப்புந் திகைப்பும் அடைந்து சிறிதுநேரஞ் சும்மா இருந்து பிறகு பாரசிக அம்மையாரைப் பார்த்துக் 'கமலாம்பா, இந்தப் பார்சிக்கார் யார்? நீ மங்கைப்பருவம் அடைந்ததும் யானும் உன் தமையனும் இந்த இடத்திற்கு வந்துவிட்டோம். நாங்கள் இங்கே வந்துசேர்ந்து பல வருஷங்கள் கழிந்தபின்புதான் உன் தாயாரை உன் தமையன் இங்கே அழைத்து வந்தான். அப்போது நீ எப்படியோ காணாமற் போய் விட்டாய் என்பது மட்டுந்தான் எனக்குத் தெரிந்து யான் துக்கப் பட்டேன்.” என்று சொன்னார். அதற்கு அம்மையார் "இவர் என் கணவனார்” என்று அவரைச்சுட்டி அப்பெரியவர்க்குக் காட்டினார். அதைக் கேட்ட அப்பெரியவர் பின்னுந் திகைப் படைந்து "காட்டிலே திகைப்பூண்டை மிதித்தவனைப்போல், நான் இப்போது ஒன்றுந் தோன்றாமல் திகைப்படைந் திருக்கின்றேன். இங்கே நடந்தவைகளும் இப்போது ஒன்றன்பின் ஒன்றாய் வெளிவருபவைகளும் ஒரு பெருஞ் சிக்கலாயிருக்கின்றன. இந்தச்சிக்கு எல்லாங், கமலா, உன் தாயாலேதான் நீக்கப்பட வேண்டும். இங்கே இப்போது வெளிப் பட்ட இந்த உறவுமுறைகளெல்லாம் நம்முடன் நிற்கும் இந்த ஆட்கள் எவர்க்கும் இப்பொழுது தெரிவிக்கவேண்டாம். பின்னே தெரிவிக்க வேண்டிய முறைப்படி தெரிவிக்கலாம். நாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/295&oldid=1582591" இலிருந்து மீள்விக்கப்பட்டது