உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

267

எல்லா வற்றையும் விரிவாகக் கலந்துபேச வேண்டும். இனி அங்கே செய்யவேண்டியதைப் பற்றி முடிவு கட்டுங்கள்.” என்று பகர்ந்தார்.

எங்கள் பாரசிகப் பெருமான் தம் ஆட்களைப்பார்த்து, வெட்டுண்டு கிடந்த என் தந்தையார் காயங்களைக் கட்டி இரத்தத்தைத் துடைத்து வேறு ஆடைஉடுத்து ஒழுங்கு படுத்தும்படி கட்டளையிட்டார். என் தந்தையார்க்காக மிகவுந் துயரம் அடைய வேண்டாம் என்று அந்தப்பெரியவரும் பாரசிக அன்னையாரும் பெருமானும் எனக்கும் என் தமையனுக்கும் ஆறுதல்மொழிகள் பலவற்றைச் சொன்னார்கள். அதிகாரியும் அவருடன் வந்த சேவகர்களும் உயிரோடு பிடிக்கப்பட்ட கள்வர் நால்வரைக் கேட்டு, இறந்துபோன கள்வர் வரலாறுகளையும், எங்களை அவர்க ளெல்லாருமாய்ச் சேர்ந்து இம் மலைக் குகைக்குப் பிடித்துவந்த வரலாறுகளையு மெல்லாம் எழுதிக் காண்டார்கள்; அவற்றோடு தொடர்புபட்டமட்டில் எங்கள் வாய்மொழிகளையுங் கேட்டுக் குறித்துக்கொண்டார்கள்.பிறகு, அக்கள்வர்கள் விருப்பப்படி இறந்துபோன கள்வர்களை அடக்கஞ் செய்யவேண்டிய வகைகளுந் தீர்மானஞ் செய்யப் பட்டன. இப்போது விடியும் நேரமாயிற்று. அப்பெரியவரின் மகன் இப்போது கண்விழித்தார். விழித்ததும், அருந்துதற்குத் தண்ணீர் வேண்டுமென்று கைக்குறி காட்டினார். உடனே யான் கோயிலின் உட்சென்று அம்மை திருவுருவத்திற்குப் பின்னேயுள்ள அருவிநீர்க் குட்டத்திலிருந்து தண்ணீர் முகந்துவந்தேன். அம்மையார் இப்போது தமக்குத் தமையனாரென்று தெரிந்த அவர்க்குத் தாமே அதனைப் பருகக் கொடுத்தார். அங்ஙனங் காடுக்கையில் அவர் அம்மையாரது முகத்தை உற்றுப்பார்த்து வியப்புற்றார் என்பது அவரது முகத்திற் றெரிந்தது. ஆனாலும், அவராற் பேசக்கூடவில்லை. தமது மார்பிலுள்ள வெட்டுக் காயத்தைத் தொட்டுக் காட்டி மறுபடியுங் கண்களை மூடிக் கொண்டார். பக்கத்தில் நின்ற அதிகாரி அவரது நரம்பை ஆராய்ந்துபார்த்துச் “சிறிதுங் காலந் தாழாமல் இவரைப் பம்பாய் மருத்துவச் சாலைக்குக் கொண்டுபோக வேண்டும். இவரது உயிர்க்கு ஏதும் இடரில்லை யென்றாலுங், கத்தியின் முனை குத்தி இவரது நெஞ்சப்பை சிறிது பழுதுபட்டிருக் கின்றது. அதனை விரைவிற் சீர்திருத்த வேண்டும்" என்று று மகாராட்டிரத்திற் சென்னார். அதனைக் கேட்டதுந் தம் மனைவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/296&oldid=1582592" இலிருந்து மீள்விக்கப்பட்டது