உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

மறைமலையம் -14

பம்பாயிலிருந்து சென்னைக்குவந்த என் கணவனார் அப்போது நம்ம வீட்டுக்குப் பக்கத்து மாளிகையிற் குடியிருந்தார். அப்போது அவரும் சிறு வயதினர். ஒருநாள் விடியற்காலையில் தலைமுழுகி

டு மேல் மாடியிற் சென்று என் கூந்தலை ஈரம் புலர்த்திக் கொண்டிருந்தேன். அப்போது அவருந் தமது மேன்மாடி மேல் தனியே உலவிக் உலவிக்கொண் டிருந்தார். அவர் என்னையும் யான் அவரையும் பார்த்தோம். அம் முதற் பார்வையிலேயே யான் அவரையின்றியும் அவர் என்னையின்றியும் உயிர்வாழ முடியாதென உணர்ந்தோம். எம்மிருவர்க்குள்ளும் உண்டான அன்பின் பெருக்கை என்னால் எடுத்துக்காட்டமுடியாது; எம்மைப் போல் அன்பாற் கட்டு பட்டவர்களுக்கே அதன்றன்மை புலப்படும்.பிராமணரல்லாத மற்றச் சாதியில் அன்பான ஒருவரை மணஞ் செய்து கொண்டால் என்ன? என்று உன்னை யான் கேட்டபோ தெல்லாம் 'பிராமணாளாகிய நாம் கல்யாணம் இல்லாமற் சும்மாஇருந்தாலும் இருக்கலாமே ஒழிய மற்றச் சாதியாரோடு எள்ளளவுங் கலக்கலாகாது' என்று ஒரேகட்டாய் மறுத்து விட்டாய். நானோ என் மனமும் அன்பும் பதியப் பெற்ற ஒருவற்கு உரியவளே யல்லாமல், உனக்கும் நம் உறவினர்க்கும் உரியவள் அல்லேன் என்னும் உணர்ச்சிகொள்ளப் பெற்றேன். ஒரு பண் தன் அன்பிற்கு இசைந்த ஒரு காதலனைத் தானே தெரிந்தெடுக்கும் அறிவினைத் தெய்வத்தின் அருளாற் பெற்ற பின், ஈதொன்றில் மட்டும் மாறாய்நிற்குந் தன் பெற்றோர்க்காவது உறவினர்க்காவது கீழ்ப்படிந்து நடக்கக் கடமைப்பட்டவள் அல்லள் என்னும் நினைவும் என் உள்ளத்தில் வேரூன்றித் தோன்றியது. என் அன்பைக் கவர்ந்த காதலனை யல்லாமல் வேறொருவனை மணக்கும் படி நீ வற்புறுத்தினால், அஃது என்கற்புக்குப் பழுதாகுமாதலால், உன்னையும் உறவினரையும் விட்ட கன்று என் காதலனோடு போய்விடுவ தொன்று அல்லது உயிர்துறப்ப தொன்று என்று உறுதிசெய்திருந்தேன்.” என்று சொல்கையில்,

என்பாட்டி அப்படியானால் “நீ அப்போது உடனே என்னை விட்டுப் போகாமல் இருந்தது ஏன்?” என்று வினவினார்.

“அம்மா, என் கணவர் அப்பொழுது தம் தந்தையார் கட்டளைப் படி வியாபார முறைகளைக் கற்றுக்கொள்வதிலும், அதனோடு நாடோறுங் கல்விச்சாலைக்குப் போய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/305&oldid=1582604" இலிருந்து மீள்விக்கப்பட்டது