உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

கோகிலாம்பாள் கடிதங்கள்

275

நேர்ந்தால் நான் எப்படி உயிரோடிருப்பேன்! என்று எண்ணிக் கலங்கினேன். ஏழைகளாகிய நம்முடைய முகத்தைக் கடவுள் மறுபடியும் இரக்கத்தோடு பார்த்தார். நீ சூல்கொண்ட அந்த மாதத்திலேயே மறுபடியும் உன் தமக்கை சூல்கொண்டாள். அதைக் கண்டு போனவுயிர் மீண்டு வந்தவளைப் போல் ஆனேன். பத்துமாதமுங் கழித்து நீ முதலில் ஒருபெண்குழந்தை ஈன்றாய், அது பெருந்தி கிலை எனக்கு உண்டாக்கியது. அன்னந் தண்ணீரும் இல்லாமற் கடவுளை வேண்டினேன். நீ மகவு ஈன்ற இரண்டாம் நாள் உன் தமக்கையும் ஒரு பெண்மகவு ஈன்றாள். ஆனால், இந்த முறை பின்னும் ஓர் இடைஞ்சல் நேர்ந்தது. உன் தமக்கை கணவனும் வீட்டிலுள்ள மற்றவர்களும் இச்சமயத்தில் வீட்டிலேயேயிருந்தார்கள். இதற்கென்ன செய்வதென்று நான் வருத்தப்படுகையில் எனக்குப் பேருதவியாய் இருந்த மருத்துவச்சி ஒரு மயக்கமருந்தை என்கையிற் கொடுத்தாள். அதை என் மனச்சாட்சிக்குமாறாக உன் தமக்கைக்கும் அவள் வீட்டிலுள்ளார் அனைவர்க்குங் கஷாயத்திலுஞ் சாப்பாட்டிலுங் கலந்து கொடுத்துவிட்டேன்! உன் தமக்கை பிள்ளைபெற்ற அதேஇரவில் எல்லாரும் மயக்கம் அடைந்து நன்றாய்த் தூங்கினார்கள். உடனே, நீ பெற்ற அழகே ஒரு வடிவெடுத்தாற்போன்ற அந்தப் பெண் குழந்தையை உன் தமக்கையிடங் கொண்டுபோய்ச் சேர்ப்பித்து, அவள் பெற்ற அழகற்ற பெண்பிள்ளையை முன்சொன்ன ஏழைப் பார்ப்பாத்தியிடமே கொடுத்து வளர்த்துவந்தேன். ஆனால், அக் குழந்தை மாந்தத்தால் மூன்றாம் மாதம் இறந்துபோயிற்று! இப்படியாக இரண்டாம் முறையும் நமது இரகசியம் வெளிப்படாதபடி அருள் செய்த ஈசனுக்கு அல்லும் பகலும் என் வணக்கத்தைச் செலுத்திக்கொண்டு, இனிமேல் இப்படிப்பட்ட துன்பத்திற்கு நீ இடஞ்செய்யலாகாதென்று நான் உன்னைக் கெஞ்சிக் கேட்டும் வந்தேன். பிறகு மூன்றுமாதம் ஆனதும், ஒருநாள் விடியற் காலையில் நான் கண் விழித்துப்பார்க்க, ஐயோ! மகளே! உன்னை நான் காணவில்லை! இப்படியும் என்னைவிட்டு நீ அகலலாமா!” என்று சொல்லி அப் பாட்டி அத் துயரத்தால் விம்மி விம்மி அழுதார்.

L

அதைக் கண்டு என் அன்னை அப் பாட்டியைத் தேற்றி, "அம்மா, இப்போது எல்லாவற்றையும் நான் ஒளியாமற் சொல்வதிற் குற்றமில்லை. வியாபாரத்தின் பொருட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/304&oldid=1582603" இலிருந்து மீள்விக்கப்பட்டது