உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

மறைமலையம் -14

நாள் நீ நம்ம வீட்டில் மகா சௌந்நதரியமுடைய ஓர் ஆண் குழந்தையைப் பெற்றாய். உடனே மருத்துவச்சியும் நானுமாய்க்கலந்து உன் குழந்தையை உன் தமக்கையிடஞ் சேர்ப்பிக்கத் தீர்மானஞ் செய்தோம். அப்போது ஈசன் எங்களுக்குப் பின்னுமோர் உதவிசெய்திருந்தார். உன் தமக்கை பிள்ளைபெற்ற பெருவருத்தத்தால் சன்னிகண்டு நாலைந்துநாள் தன் உணர்வு தனக்கு இல்லாமலே யிருந்தாள். அதனால் உன் பிள்ளையைஅவளிடமும், அவள் பிள்ளையை ஓர் ஏழைப் பார்ப்பாத்தியிடமுஞ் சேர்ப்பிப்பது எனக்கும் மருத்துவச்சிக்கும் எளிதாயிருந்தது. நீ பெற்ற அந்த ஆண்பிள்ளை சொல்லுக்கு அடங்காத அழகுடையதாயிருந்தமையால், அதைப் புறத்தியாள் ஒருத்தியிடங்கொடுக்க என் மனந் துணியவில்லை. உன்

தமக்கையின் பிள்ளையோ கறுப்பாய் அழகில்லாமல் இருந்ததனால் அதைப் புறத்தியாளிடங் கொடுக்க மனம் வந்தது; அப்படிக் கொடுத்தாலும், அந்தக்குழந்தையுஞ் செவ்வையாக வளரும்பொருட்டு நான் பட்டதுன்பங் கடவுளே அறிவார். பிறகு உன் தமக்கை சன்னி தீர்ந்து குழந்தையைப் பார்த்ததும் அவ்வளவு அழகான குழந்தையைத் தான் பெற்றதைக் குறித்து அளவிறந்த மகிழ்ச்சி அடைந்து அதனைக் கண்ணுங் கருத்துமாய் வளர்த்து வந்தாள். அவள் கணவனுந் தன் குழந்தை யென்றெண்ணியே அதனிடத்து அளவில்லாத ஆசைவைத்து வளர்த்து வந்தான். அவ்வளவோடு எல்லாம் இரகசியமாகவே நடந்து போயிற்று.உன் தகப்பனுந் தமையனும் இல்லாமல் யான் வறுமையால் துன்பப்பட்டாலும், பிறகு ஒருவருஷம்வரையில் உன்னைப்பற்றிய மட்டில் கவலைக்கு இடமில்லாமல் இருந்தேன். ஆனால், ருந்தேன்.ஆனால், அவ்வொரு வருஷம் போனதும் மறுபடியும் நீ கர்ப்பவதி யானதும்! மறுபடியும் எனக்குண்டான அச்சமுங் கவலையுந் துன்பமும் இப்போது நினைத்தாலும் என் உயிர் போய் விடும்போல் தோன்றுகிறது. உன்னைக் கடிந்து கொள்ளவும் எனக்கு மனம் வரவில்லை. நான் முதலிற் சொல்லிய புத்திமதிகளைக் கடந்து நடந்ததற்காக நீ உன்னையே மிகவும் நொந்துகொண்டு என்முகத்தை ஏறிட்டுப் பார்ப்பதற்கே நீ நாணமுற்றாய் என்பதைத் தெரிந்துகொண்டேன் மனவருத்தத் தால் உன்னையே நீ மாய்த்துக் கொண்டால் என் செய்வது! என்று எண்ணிப்பார்த்துக் கடைசியாக நானே உனக்கு ஆறுதல் சொல்லி வரலானேன். என் கண்மணியாகிய உனக்கு ஒன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/303&oldid=1582601" இலிருந்து மீள்விக்கப்பட்டது