உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

273

வடிவத்தை அடைந்த என் தமக்கையை இரண்டொருமுறை நான் காண நேர்ந்ததும் அவளை இன்னாளென்று நான் தெரிந்து கொள்ள இயலாமற் போனேன்! ஆனாலும், அவர் என்னைக் கண்டபோது என்னை இன்னாளெனத் தெரிந்துகொள்ளாதது நீண்டகாலப் பிரிவினாலும், பார்சிக்காரர் உடையில் ஒரு பார்சிக் கனவானுக்கு மனைவியாய் இருப்பதானலும் என்றே நினைக் கின்றேன். அதிருக்கட்டும். நான் கேட்டவைகளுக்கு நீ இன்னுந் தக்கவிடை சொல்லவில்லையே?" என்று என் அன்னையார் மொழிந்தார்.

“கண்மணி கமலம், நான் பட்டதுன்பங்கள் என் நினைவுக்கு வந்ததனால், அவற்றை அடக்கமுடியாமல் உனக்குச்சொன்னேன். நம்ம வீட்டில் ஆண்பாலார் எவருமில்லாமையால், நான் உன்னை வைத்துக் கருத்தாய்ப் பாதுகாத்துவந்தேன். நம்ம உறவின ரெல்லாருஞ் சேர்ந்து நம்மையும், உன்தமக்கை அவள் கணவன் அவர்கள் வீட்டிலுள்ளவர்கள் எல்லாரையுஞ் சாதியைவிட்டு விலக்கிவைத்து விட்டார்கள்! இதுவும் நமக்கொரு நன்மையாகத் தான் முடிந்தது. அதனால், உன் தமக்கை கணவன் என்மேல் வருத்தமாய் நம்ம வீட்டிற்கு வருவதில்லை; அவனைச் சேர்ந்தவர்களும் வருவதில்லை; உன் தமக்கையையும் நம்ம வீட்டிற்கு அனுப்புவதில்லை. நான் மட்டும் வேண்டியபோது உன் தமக்கையைப் போய்ப்பாத்து வந்தேன். இப்படிநடந்துவருகையில் திடீரென்று நீ கர்ப்பவதி யானாய். அதைக்கண்டதும் நான் இடி விழுந்தவள்போல் ஆனேன். உன்னைப் பார்த்தே நான் எல்லாத் துன்பங்களையும் பொறுத்து வந்தேன்! கடைசியில் உன்னாலும் துன்பம் வந்ததே! என்று நினைத்து நினைத்து ஆறாத் துயரத்திற்கு ஆ ளாகினேன். அப்போது உனக்கு நான் எவ்வளவோ புத்திமதிகள் சொன்னேன். நீயும் எனக்கு உண்மையைச் சொல்லிவிட்டாய். நீ கர்ப்பவதியா யிருப்பதை நம்மவர் தெரியாமல் மறைத்துவைக்க நான் பட்டபாடு ஈசனே அறிவான்! நல்லவேளையாய், யார் செய்த புண்ணியமோ உன் தமக்கையும் அதேகாலத்திற் சூல்கொண்டாள். அவள் பத்து மாதமுங் கழித்து ஓர் ஆண்மகவு ஈன்றாள். அப்போது அவள் கணவன் ஊரிலில்லை. அவனைச் சேர்ந்த பெண்பாலாரில் நெருங்கிய உறவினரும் நாலைந்துநாட் கழித்துத்தான் உதவிக்குவந்தனர். அதனால் மருத்துவச்சியும், நானுந்தான் உன் தமக்கையின் பிரசவத்துக்கு அறையில் உதவியாயிருந்தோம். அவள் குழந்தை பெற்ற மூன்றாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/302&oldid=1582600" இலிருந்து மீள்விக்கப்பட்டது