உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

மறைமலையம் -14

தெரிந்ததும் ஒரு நல்வினையேயாகும்!” என்று கூறினார்.

66

டையே

மறுபடியும் அந்தப் பாட்டி அச்சமயத்தில் எனக்கு மற்றொரு பொல்லாத துன்பம் வந்தது. திடீரென்று முதலில் உன் தமையனும் பிறகுன் தகப்பனுங் காணாமற்போய்விட்டார்கள் ஏதும் அற்ற ஏழைப் பெண்பிள்ளையாகிய நான் அடைந்த துன்பத்தை எப்படிச் சொல்லுவேன்!

என் துன்பம் ஒருபக்கமாயிருந்தாலும், மங்கைப் பருவத்தை அடைந்த என் அருமைக் கண்மணிகளாகிய உங்கள் நிலைமைக்கும், சிறிதும் ஈவிரக்கம் இல்லாக் கொடியரான நம்ம பார்ப்பார்களின் கடுமைக்கும் பரிகாரம் எப்படியென்னுங் கவலை என்னுயிரைத் தின்றுகொண்டே வந்தது! நல்லகாலமாய் இதோ கிடக்கும் என் மூத்த மருமகனை பலவிடங்களிற் பெண்தேடிச் சரிப் படாமையால் உன் தமக்கையைக் கல்யாணஞ் செய்துகொள்ள வந்து கேட்டார். அப்போது என்னிடமிருந்த நகை பகைகளை யெல்லாஞ் சரிப்படுத்தி ஓர் ஆயிரரூபாதான் நான் செலவழிக்கக் கூடுமென்று தெரிவித்தேன். அவர்கள் இசைந்து உடனே உன் தமக்கையைக் கட்டிக்கொண்டார்கள். கல்யாணம் முடிந்தபின் உன் தமக்கை மங்கைப்பருவம் அடைந்தபிறகு கல்யாணம் செய்யப்பட்ட உண்மை எல்லார்க்குந் தெரிந்துவிட்டது! உன் உடம்பு உன் தமக்கையுடம்பைவிடக் கொழுமையா யிருந்தது. உன்னை அப்போது பார்த்த நம்ம பெண்பாலார்சிலர் உன்னை ஐயுறவோடு கருதிப் பார்த்ததையும் அறிந்தேன். அதனால், உன் தமக்கை கல்யாணம் நடந்தபோது அதற்கு உன்னை அழைத்துப் போகாத படி திட்டம் பண்ணினேன். கல்யாணம் நடந்தபிறகும் உன்னை அவர்கள் அகத்துக்கு அழைத்துப்போகாமல் அவ்வளவு கருத்தாக வைத்திருந்தேன்!" என்று சொல்லும் போது,

66

ஆம், அம்மா, அதனாலேதான், இதோ கிடப்பவர் என் தமக்கை கணவன் என்பதை அறியாமற் போனேன்! நான் உன்னோ டிருந்த பின்னுஞ் சில ஆண்டுகளிலுங்கூட வரை யான் பார்த்ததே யில்லை! உன்னையும் என் தமக்கையையும் மற்றெல்லாரையும் நான் விட்டுப் பிரிந்து சற்றேறக் குறையப் பதினேழு பதினெட்டு வருஷங்கள் ஆய்விட்டமையால், இதற்கிடையில் அம்மைவார்த்து முழுதும் பழுதுபட்டு வேறாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/301&oldid=1582599" இலிருந்து மீள்விக்கப்பட்டது