உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ

66

கோகிலாம்பாள் கடிதங்கள்

271

"நான் அப்போது பட்டதுன்பம் உனக்குத் தெரியாது நன்றாய் வாழ்ந்த நமது குடும்பத்திற்குக் கொடிய வறுமை வந்தது. உனக்கு அப்போது பன்னிரண்டு வயது, உன் தமக்கைக்குக் கிட்டத்தட்டப் பதினான்கு வயது. நீங்கள் இருவரும் மங்கைப்பருவம் அடையும் முன் உங்களை நம்ம சாதிவழக்கப்படி தக்க மாப்பிளைக்குக் கல்யாணம் செய்து கொடுக்க எவ்வளவோ முயற்சி செய்தோம், முடியவில்லை.யார் வந்தாலும் பெண்ணுக்கு என்ன சீதனங் கொடுப்பாய்? ஐயாயிரங் கொடுப்பாயா? இரண்டாயிரத்துக்கு நகைபோடு வாயா? மூன்று பரீட்சை வரையில் மாப்பிளையைப் படிக்க வைப்பாயா? என்று கேட்டார்களேயொழியப், பெண்களின் அழகையாவது தன்மையையாவது கல்வியையாவது கேட்டவர்கள் எவருமேயில்லை. உங்களுக்குச் சுருக்கில் கல்யாணம் ஆகாத கவலை என் வயிற்றிலும் உன் தகப்பன் தமையன் வயிற்றிலும் நெருப்புப்பற்றி எரிவதுபோல் எரிந்துவந்தது. அன்றாடம் சீவனத்திற்குத் தேடுவதே முடியாத நிலைமையில் இருக்கையில் ஏழாயிரம் எண்ணாயிரத்திற்கும் மணச்செலவு செய்து உங்களைக் கட்டிக்கொடுக்க நாங்கள் எங்கே போவோம்! உன் தமக்கை மங்கைப்பருவத்தை அடைந்து விட்டாள். ஆனால், அதை நாங்கள் வெளிப்படுத்தாமல் மறைவாய் வைத்திருந்தோம். பின்னும் ஒரு வருஷத்தில் நீயும் மங்கைப் பருவம் அடைந்துவிட்டாய்.உன் தகப்பனுந் தமையனுந் தமிழுஞ் சமஸ்கிருதமும் நன்றாய்ப் படித்திருந்தார்களே தவிர இங்கிலீஷ் படிக்கவில்லை. அதனால் அவர்கள் நல்ல வரும்படிக்கு இடமான அலுவலில் அமரக்கூட வில்லை. அல்லது உங்களுக் காவது இங்கிலீஷ் படிப்புச் சொல்லி வைக்கலாமென்றால் அதற்கும் இடமில்லை. உங்களிருவருக்கும் உன் தகப்பனார் சொல்லி வைத்ததெல்லாந் தமிழுஞ் சமஸ்கிருதமுந் தான். உங்களுக்கு இங்கிலீஷ் தெரிந்திருந்தாலும், நம்மவர்களுக்குப் பயப்படாமல் பள்ளிக்கூடத்தில் உபாத்தியாயர் வேலைக்காவது நீங்கள் போய் இருக்கலாம்; அதற்கும் வழியில்லை. தமிழ் சமஸ்கிருதத்திலும் நீ படித்துக்கொண்டது போல உன் தமக்கை படிக்கவில்லை-” என்று அந்தப் பாட்டி சொல்லிவருகையில்,

என் அம்மையார் “அம்மா, தமிழ் சமஸ்திருதங்கூட யான் படித்திராவிட்டால் என்கதி எப்படியாயிருக்கும்! அவ்வளவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/300&oldid=1582597" இலிருந்து மீள்விக்கப்பட்டது