உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

66

மறைமலையம் -14

அதுசரிதான். நீ அப்போது பெற்ற இரண்டுபிள்ளை களைப் பற்றி மறந்து போனாயோ?” என்று அந்தப் பாட்டி கேட்டார்.

66

ல்லை, அம்மா; ஆனால், அவ்விரண்டு குழந்தைகளும் அப்போதே சிலநாட்களில் இறந்துபோனதாக வன்றோ பேச்சு வந்தது,” என்று என் பாரசிக அம்மையார் கூறினார்.

66

"குழந்தாய், நான் செய்த குற்றத்தை நீ பொறுக்க வேண்டும். இரகசியம் வெளிப்படா திருக்கும்பொருட்டு அப்போது அப்படி ஒருபேச்சு வரச்செய்தேன். நீ முதலிற் பெற்றது ஓர் ஆண்குழந்தை, அதேநாளில் உன் தமக்கை பெற்றதும் ஓர் ஆண்குழந்தை. உன் குழந்தையை உன் தமக்கை அறியாமல் அவளிடங் கொண்டு போய்ச் சேர்த்து, அவள் குழந்தையை ஓர் ஏழைப் பார்ப்பாத்தியிடங் கொடுத்து வளர்த்து வந்தேன். அந்தப் பார்ப்பாத்தியிடமும் பிறகு எங்களிடமும் வளர்ந்த அந்த சேதுராமன்தான் இதோ மாண்டு கிடக்கும் இந்தச் சேதுராமன்! பின்னும் இரண்டு வருஷங் கழித்து நீ ஒரு பெண் குழந்தை பெற்றபோது, உன் தமக்கையும் அதேநாளில் ஒரு பெண்பிள்ளை பெற்றாள். அவளுக்குத் தெரியாமல் உனது பெண் குழந்தையையும் அவளிடஞ் சேர்ப்பித்து, அவள் பெற்ற பெண்பிள்ளையை முன்சொன்ன ஏழைப் பார்ப்பாத்தியிடமே காடுத்து வளர்த்து வந்தேன், ஆனால், அப் பெண்குழந்தை மூன்றாம் மாதத்தில் இறந்துபோயிற்று. நீ பெற்ற குழந்தைகள் இரண்டும் உன் தமக்கை குழந்தைகளாகவே அவளாலும், அவள் கணவனான இதோ கிடக்கும் என் மூத்த மருமகனாலும் வளர்க்கப் பட்டுவந்தன. அக் குழந்தைகைளுக்குப் பத்துப் பன்னிரண்டு வயதாகிறபோது உன் தமக்கை ஒரு பெண்குழந்தை பெற்றாள் என்றும், அக்குழந்தைக்கு இப்போது வயது எட்டு என்றுங் கேள்விப் பட்டேன்.” என்று அந்தப் பாட்டி கூறினார். என் தமக்கை குழந்தைகளை அவளுக்குத் தெரியாமல் எப்படி அகற்றினாய்? ஏன் அகற்றினாய்? என் குழந்தைகளை வேறு ஒருவரிடங்கொடுத்து வளரச் செய்யாமல் தமக்கையிடஞ் சேர்ப்பித்தது ஏன்? அம்மா, அவ்வுண்மைகளை எனக்கு விளக்கிச் சொல்ல வேண்டும்.” என்று என் அம்மையார் தம் தாயைக் கேட்டார்.

66

என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/299&oldid=1582596" இலிருந்து மீள்விக்கப்பட்டது