உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.

கோகிலாம்பாள் கடிதங்கள்

269

சொல்லிய படியே எல்லாம் ஒரு பெருஞ் சிக்காய்த்தான் தோன்றின. எனக்கு ஒன்றுமே விளங்கமாற் றிகைப்புற்று நின்றேன். இதற்குள் அந்தப் பாரசிக அம்மையார் தம் தாயெனத் தெரிந்த அப்பாட்டியை நோக்கி “அம்மா, இவர் சேதுராமன் தகப்பனாரல்லர். இதோ, இந்தக் கோகிலாம்பா ளுக்கும் அதோ நிற்குஞ் சுப்பிரமணியத் திற்கும் அவர் தகப்பனார். நீ ஏதோ தவறுதலாய் எண்ணி விட்டாய்!" என்று மொழிந்தார்.

சிறிதுநேரம் அந்தப்பாட்டி தனது துயரத்தையும் மறந்து ஆழ்ந்த நினைவிலிருந்தார்; பிறகு எம் மிருவரையும் உற்றுப் பார்த்தார்.யாங்கள் “பாட்டி, நாங்கள் தாம் இவர் பிள்ளைகள்!” என்று அம்மையார் சொற்களை உறுதிப்படுத்திக் கூறினோம்.

அப் பாட்டி தம்மையே தாம் நொந்துகொண்ட ஒரு குறிப்புடையவராய் “இல்லை! இல்லை! சேதுராமன் தான் இருவருடைய மகன்! நீங்கள் இருவரும் இதோ உள்ள என் இளையமகள் கமலாம்பாள் பிள்ளைகள்!” என்று எங்களை நோக்கிச் சொல்லிப், பின்னர்த் தம் மகளைப்பார்த்து “என் கண்மணி, கமலா, இவ்விருவரும் உன்னுடைய உண்மையான பிள்ளைகள்!” என்று வற்புறுத்திச் சொன்னார்.

"அம்மா, இவர்கள் இருவரையும் என் மக்களினும் மேலாகவேதான் எண்ணியிருக்கின்றேன். ஆனாலும், இவர்களை யானே என் வயிற்றிற் பிள்ளைகளாகப் பெறும் நல்வினை செய்தேன் அல்லேன்!” என்று தம் அன்னையின் நினைவு பிசகிய உணர்ச்சியைத் திருத்துவார்போல் வலியுறுத்தி முன்போலவே புகன்றார்.

அதற்கு அந்தப் பாட்டி புன்சிரிப்புக் கொண்டு சுற்றிலும் நோக்கினார்.சிறிது விலகி நின்ற அந்தப் பாரசிகப் பெருமானைப் பார்த்ததும் ஒரு புதுநினைவு தோன்றப்பெற்றுத் தம்மகள் பக்கமாய்த் திரும்பி “அம்மா கமலம், அதோ நிற்கும் அவர் அந்தப் பார்சிக்காரர்போல் தோன்றுதே? என்று பழைய ஒரு நினைவைக்குறித்துக் கேட்பார்போல் வினவினார்.

66

அம்மா, அதே பாரசிக்காரர்தாம்! அவர்தாம் என அருமைக் கணவனார்!” என்று உறுத்திச் சொல்லித் தம் அன்னை சொல்லியதற்கு இணங்கிப் பேசினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/298&oldid=1582595" இலிருந்து மீள்விக்கப்பட்டது