உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

மறைமலையம் -14

இந்நூலைப் பற்றிய குறிப்புரை...

அறிவுச் சிறப்பிற்கும், மனம்மொழி மெய்களின் தூய்மைக்கும் ஏற்ற இன்பச் சுவை மட்டுமே பெருகி நிற்கும் வகையில் புத்திலக்கியங்கள் பூக்க வேண்டும். அவற்றில் சொற்பொருள் நலன்கள் தூயனவாகத் துலங்குதல் வேண்டும். உலக இயற்கை, மக்கள் இயற்கைகட்கு ஏற்ப அமைந்த இலக்கியங்களே உண்மையானவை; அறிஞரின் பாராட்டுக் குரியவை. இவ்வாறு நூல்முறைகூறும் அடிகளாரின் கோகிலாம்பாள் கடிதங்கள், ஒரு பண்புநலன் சார்ந்த நாவலாகவே காணப்படுகின்றது.

வாழ்வியல் உண்மைகளையும், மொழி சமயம் பற்றிய கருத்துகளையும் அடிகளார் இந்நூலில் கூறியுள்ளார். காதல ரிடத்தே நிகழும் நினைவின் ஒருமையும், அடியார் களிடத்தே தோன்றும் ஒருமையும் ஒருமையும் எவ்வகையானும் ஒத்திருக்கும். நன்மக்கட்பேறே இவ்வுலக வாழ்வுப் பயனாகும். செல்வத்தால் வரும் மதிப்பு செல்வ நிலைக்கு ஏற்ப மாறுபடும். நமது பிறவியின் இன்ப துன்பங்களுக்கு நாமும் நம்மவர்கள் செய்யும் வினைகளும் காரணமாகும்.

ல்

முக்கனியின் தீஞ்சாறென விளங்கும் மெல்லொலி கொண்ட செந்தமிழ்க் கல்வியை அனைவரும் கற்கும் வகை செய்ய வேண்டும். சமுதாய மொழிக் கொள்கைகளைக் கூறும் அடிகளார் பிறப்பு இறப்பு இல்லாச் சிவபிரானே முழுமுதற் கடவுள் எனத் தம் கடவுட் கொள்கையையும் குறிப்பிட்டுள்ளார்.

ஆய்வாளராகவும் அறிஞராகவும் விளங்கிய அடிகளாரைப் படைப்பிலக்கிய ஆசிரியராக அறிமுகப் படுத்தியது 'கோகிலாம்பாள் கடிதங்கள்'. கடித வடிவ நாவல்களின் நுட்பங்களை யெல்லாம் ஒருங்குகொண்ட நாவலாக இது விளங்குகிறது. அடிகளாரின் அருந்திறனுக்கும் புத்திலக்கியப் போக்கிற்கும் என அமைந்த அரிய படைப்பு இது.

ரே

– டாக்டர் நா. செயப்பிரகாசு

-

மறைமலை அடிகளின் இலக்கியப் படைப்புகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/31&oldid=1581989" இலிருந்து மீள்விக்கப்பட்டது