உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

இரண்டாம் பதிப்பின் முகவுரை

தன்

'கோகிலாம்பாள் கடிதங்கள்' என்னும் இப்புதுக்கதை நூல் ற்றைக்குப் பத்தாண்டுகட்கு முன் வெளியாகியது. இரண்டாம் பதிப்பு இப்போதுதான் வெளிவருகின்றது. முதற் பதிப்பிலிருந்த சிற்சில எழுத்துப் பிழைகளும் ஒரு பெயர் மாறாட்டமும் இதன்கண் திருத்தப்பட்டன. இவற்றிற்குமேல் வேறு ஏதொரு மாறுதலும் இதன்கட் செய்யப்படவில்லை.

இந்நூற்கதையின்கண் வருந்தலைவி கோகிலாம்பாளும் அவளுக்கு முதல் உறவினரும் பார்ப்பன இனத்தைச் சேர்ந்தவர் களாயிருத்தலாலும், அவள் தந்தையாகிய பாரசிகர் வட நாட்டவரா தலாலும் அவர்களுடைய உரையாட்டுகளில் இடை யிடையே வட சொற்களுஞ் சில கொச்சைத் தமிழ்ச்சொற்களுங் கலந்திருத்தல் காணலாம்.

உலகவழக்கிற்கு மாறுபடாமல், அதன் நிகழ்ச்சிகளை அங்குள்ளவாறே எடுத்து அவற்றை விழுமியவாக்கித் தொடுத்துக், கதைகளும் நாடகங்களும் இயற்றுதலே, புனைந்துரை வழக்கில் வைத்து அவை தம்மை இயற்றும் நல்லிசைப்புலவனுக்கு இன்றியமையாத கடமையாம். உலக இயற்கையிலும் மக்கள் இயற்கையிலும் ஒருசிறிதுங் காணப்படாதவைகளைத் தானே படைத்து ஒரு கதை நூல் வகுத்தல் நல்லிசைப்புலமையாகாது.வ மொழியிலுள்ள பழங்கதைகள், இறைவன் வகுத்த உலக இயற்கையிலும் மக்கள் இயற்கையிலும் ஒரு சிறிதுங் காணலாகாத வகளைப் படைத்து மொழிதலால், அவை தம்மைப் பிற்காலத்தே மொழிபெயர்த் துரைத்த புலவர்கள் தமிழ்நூல் வழக்கிற்கு ஒவ்வாத அவைகளைத் தாம் சிறிதாயினும் பகுத்துணர்ந்து பாராமல் அவ்வட நூல்களிலுள்ளவாறே எடுத்து மொழிந்து, ஆராய்ச்சியுணர்வு சிறிதுடையார்க்கும் பெரியதோர் அருவருப்பினை விளைவியா நின்றனர். ஒரு குரங்கு கடலைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/32&oldid=1581990" இலிருந்து மீள்விக்கப்பட்டது