உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

❖LDMMLDMOшILD -14❖

தாண்டிற்றென்றலும், அஃது ஒரு மலையைப் பெயர்த்தெடுத்துக் காணர்ந்த தென்றலும், ஒருவன் பத்துத் தலையும் இருபது கைகளும் உடையனாயிருந்தன னென்றலும், மற்றொருவன் இரண்டாயிரங் கைகள் உடையனாயிருந்தன னென்றலும், ஒருத்தியை வேறொருவன் சிறையாக எடுத்துச் சென்றக்கால் அவளிருந்த நிலத்தைப் பெயர்த்தெடுத்துச் சென்றானென்றலும், ஒருவன் தன் கையிலிருந்த வட்டத்தைச் சுழற்றியெறிந்து பகலவனை மறைத்தானென்றலும், இன்னும் இவைபோல்வன பிறவுமெல்லாம் உலக இயற்கை மக்களியற்கையில் எவரும் எங்குங் காணாதனவாகும். ஆகையால், இன்னோரன்ன பொருந்தாப் புனைவுகளை ஒரு கதையிலாதல் ஒரு நாடகத்திலாதல் இயைத்துரைத்தல் நல்லிசைப்புலமைக்குச் சிறிதும் ஒவ்வாது. னென்றால், இயற்கைக்கு முழு மாறான கட்டுக்கதைகளைக் கூறும் நூல்களைப் பகுத்தறிவுடையார் கற்பராயின் அவர்க்கு அவை இன்பம் பயவாவாய் வெறுப்பினையே விளைக்கும்.

புதுக்கதைகளும் நாடகங்களும் ஆக்குதலின் நோக்கம் என்னென்றால், இன்பச்சுவையினையும், அதனோடு அறிவுவிளக்கத் தினையும் தந்து, அவ்வாற்றால் மனமாசு நீக்கி மக்கள் ஒழுகலாற்றினைத் தூயதாக்குவதேயாம். இனி, இன்பச் சுவையினைப் பயப்பதொன்றே கதைகள் நாடகங்கள் காப்பியங்கள் ஆக்கும். நல்லிசைப்புலவனுக்குத் தனிப்பெரு நோக்கம் ஆதல் வேண்டுமென்பாரும், மற்ற இன்பச்சுவையினை ஒருவாயிலாக் கொண்டு மக்கள் மனமாசு களைந்து அவர்தம் ஒழுகலாற்றினைச் சீர்திருத்தஞ் செய்தலே அந்நூல்கள் யாக்கும் ஆசிரியர்க்குக் கடமையாதல் வேண்டுமென்பாரும் என இருதிறத்தர் ஆங்கில நூலாசிரியர், பண்டைத் தமிழகத்தும் இங்ஙனம் இருவேறு கொள்கை களுடைய நல்லாசிரியர் இருபகுப்பினர் உளரேனும், மனமொழி மெய்கள் தூயவாதற்கு இன்பச்சுவையினை ஒருவாயிலாகக் கொள்வாரே தமிழாசிரியரில் மிகப்பலர். இஃது, ஆசிரியர் நக்கீரனார்,

66

'கடுத்தின்னாதானைக் கட்டி பூசிக் கடுத்தீற்றியவாறு போலவுங், கலங்கற்சின்னீர் தெருளாமையான் உண்பானை, அறிவுடையான் ஒருவன் பேய்த்தேரைக்காட்டி ‘உதுக்காணாய்! நல்லதொருநீர் தோன்றுவ, அந்நீர்பருகாய், இச்சேற்று நீர் பருகி என்செய்தி?” என்று கொண்டுபோய், நல்லதொருநீர் தலைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/33&oldid=1581991" இலிருந்து மீள்விக்கப்பட்டது