உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

5

படுவித்து ஊட்டியது போலவுந், தான் ஒழுகா நின்றதோர் இணைவிழைச்சினுள்ளே மிக்கதோர் ஒழுக்கங்காட்டினான். என்று இறையனாரகப்பொருள் முதற்சூத்திர வுரையில்கண் நன்கெடுத்து விளக்கிக்காட்டியவாற்றானும், ஆசிரியர் இளங்கோவடிகள் தாம் ‘சிலப்பதிகாரம்' என்னுஞ் செந்தமிழ்க் காப்பியம் இயற்ற வெண்ணியதன் நோக்கம் இதுவென்பது புலப்பட,

66

'அரைசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவதூஉம் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை யுருத்துவந் தூட்டு மென்பதூஉஞ் சூழ்வினைச் சிலம்பு காரணமாகச்

சிலப்பதி காரம் என்னும் பெயரால்

நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்"

என அந்நூற்பதிகத்தில் ஓதியருளியவாற்றானும் நன்கறியக் கிடக்கின்றது. ஆகவே, அறிவு விளக்கத்திற்கும், மனமொழி மெய்கள் தூயவாதற்கும் ஏற்ற இன்பச்சுவை ஒன்றுமே முதிர்ந்து நிற்கப் புதுக்கதைகளும் நாடகக் காப்பியங்களும் இயற்றுதலே எல்லாராலும் விரும்பற்பாலதொன்றாம். மற்று, அறிவுவிளக்கத் திற்குப் பழுது செய்யும் இயற்கை மாறுபாடுகளும், அகந் தூய்மைக்கு ஒவ்வா நிகழ்ச்சிகளுமே நிரம்ப அந்நூல்களை யமைத்தல் உயர்ந்த புலனெறி வழக்கிற்கு இசையாததொன்றா மென்று உணர்ந்து கொள்க. வடமொழியினின்று மொழி பெயர்க்கப்பட்டும், வட மொழியிலுள்ளவைகளைப் போற் செய்யப்பட்டும் இஞ்ஞான்று தமிழில் வழங்கும் புராணங்கள் காவியங்கள் முதலியன வெல்லாம், பகுத்தாராய்ந்து பார்க்க வல்லார்க்கு, அவர் நாடொறும் பழகும் இருவகை இயற்கை நிகழ்ச்சிகளொடுந் திறம்பி, அறிவுக்கு இசையாதனவாயிருத்தலின், அவை உயர்ந்த புலனெறி வழக்கின் பாற் படாவாய்,அச்சுறுத்துதற்கு எத்தகைய ‘பூச்சாண்டி'யைப் பொய்யாகப்படைத்து மொழியினும் அவை தம்மையெல்லாம் நம்பிவிடுஞ் சிறுமகாரை யொத்த' புல்லறி வினார்க்கே உவகையளிக்கும் பொய்வழக்கின்பாற் படுவனவாகும்.

மற்றுக், ‘கலித்தொகை’, ‘அகநானூறு’ முதலான சங்கத் தமிழ்ப் பாட்டுகளும்; அவற்றையடுத்துத் தோன்றிப்பட்டது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/34&oldid=1581992" இலிருந்து மீள்விக்கப்பட்டது