உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

மறைமலையம் -14

பட்டாங்கு மொழியுஞ் 'சிலப்பதிகார’மும்; உண்மையில் நடந்த தன்றாயினும் இருவகையியற்கைநிகழ்ச்சியொடும் மாறுபடாது செல்லுங் கதைதனை நூவலாநின்ற ‘சீவகசிந்தாமணி'யும்; அதற்குப் பின்னெழுந்து உண்மை நாயன்மார் வரலாறுகளை உள்ளவாறே நுவன்று, இருவகை நிகழ்ச்சியொடும் முழுதொத்து, அவற்றிற்கு மேற் புலனாகாது நிற்கும் முழுமுதற்கடவு ளியற்கையைப் புலனாக விள்ளுந் தனிப்பெருமாட்சி வாய்ந்த 'பெரியபுராணம்' என்னுந் 'திருத்தொண்டர் வரலாறும்’ அஃகியகன்ற சான்றோர் கலங்கா மெய்ம்மை விலங்கற்பாறைமேல் நலனுறவெழுப்பிய புலனெ றிவழக்காம் பொன்மாளிகையுட் பொலிந்து விளங்கும் விலையறு மாணிக்கத்தாற் சமைத்த எழில்கிளர்பாவைகளாமென்றறிந்து கொள்ளல் வேண்டும்.

இங்ஙனம் உலகவியற்கைக்கும், மக்களியற்கைக்கும் மாறாகாத மெய்வழக்கின் வழிநின்றே கதைகளும் நாடகங்களு தங் காப்பியங்களும் ஆக்கப்படல் வேண்டுமாயின், உண்மை நிகழ்ச்சிகளை உள்ளவாறே எடுத்து நுவலும் வரலாற்று (சரித்திர) நூல்கட்கும், மற்றுக் கதை நாடகங்கட்கும் வேறுபாடு என்னையெனின்; வரலாற்று நூல்கள் வரையும் ஆசிரியன், சென்ற காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைத் தொகுத்து அவற்றை முறைப் படுத்தித் திறம்படச் சொல்லும் அத்துணைக்கே யுரியனல்லது, அந்நிகழ்ச்சிகளைத் தான் வேண்டியவாறெல்லாந் திரித்துச் சொல்லுதற்குச் சிறிது முரியன் அல்லன்.மற்றுக், கதை நாடகங்கள் இயற்றும் புலவனோ செல்கால நிகழ்ச்சிகளை அங்ஙனந் திரிபுபடுத்தாமல் நுவலல் வேண்டுங் கடப்பாடு உடையன் அல்லன்; மற்று, அச்செல்கால நிகழ்ச்சிகளில் அழகியன விழுமியன சில தெரிந்தெடுத்து, அவற்றைப் பின்னும் அழகில் மிகுவித்தல் வேண்டிக் கூட்டவேண்டுவன குறைக்க வேண்டுவன வெல்லாம் நுனித்தறிந்து செய்து, இங்ஙனஞ் செய்வுழி யெல்லாம் அவை உலக வியற்கையோடும் மக்க ளியற்கையோடும் திறம்பா தமைய இழைத்து, அங்ஙனம் இழைத்து ஆக்கிய அவற்றைப் பயில்வார்க்கு நகையும் அழுகையும் இளிவரலும் மருட்கையும் அச்சமும் பெருமிதமும் வெகுளியும் உவகையும் என்ற எண்வகை மெய்ப்பாடுகளுட் சில பல தோன்றவைத்து அருகா வின்பந் தருகுவனாவன்.“வரலாற்று நூலாசிரியற்கும் நல்லிசைப் புலவற்கும் உள்ள இவ்வேறுபாட்டை விளங்க அறிதற்கு, இஞ்ஞான்று எடுக்கப்படும் நிழலுருப்படத்தையுங் கைவல் ஓவியனால்

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/35&oldid=1581993" இலிருந்து மீள்விக்கப்பட்டது