உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

7

வரையப்படும் விழுமிய ஓவியத்தையும் உற்று நோக்குமின்கள்! கருவிகொண்டு எடுக்கப்படும் நிழலுரு, எவ்விடத்தில் எக்காலத்தில் எவ்வெப்பொருள்கள் எவ்வெவ்வாறு இருந்தனவோ அவ்வவ் வாறே யமையும்; அதன்கண் அழகுள்ளனவும் அழகில்லனவும் ஆகிய கிய எல்லாந் தாந்தாம் அமைக்கப்பட்டபடியே தோன்று மல்லது தமதியல்பில் மிகுந்தாயினுங்குறைந்தாயினுந்தோன்றா

அந்நிழலுருவினை யெடுக்கும் விளைஞனும் அதன்கட்டோன்று வனவற்றிற் கூட்டியுங் குறைத்தும் ஏதொன்றுஞ் செய்ய மாட்டுவான் அல்லன்; நிழலுருக்கள், தான் பொருத்துங் கண்ணாடிப் பல வகையிற் செவ்வகையாகப் பதியப்பார்த்துப், பின்னர் அவற்றைக் காகிதத்தில் அச்சிட்டுத் தரும் அவ்வளவே அவனுக்குரிய தொழிலாகும். மற்றுக், கைவல் ஓவியனால் தீட்டப்படும் ஓவியமோ, ஓரிடத்தில் ஒருகாலத்தில் தோன்றும் ஒரு நிலக்காட்சியையோ, அல்லது சில சிற்றுயிர்களையோ, அல்லது அழகிற் சிறந்த மக்களையோ ஆங்காங்குக் காணப்படும் இயற்கைக்கு முரணாமல் மேன்மேல் அழகுமிகுத்து, அவ்வ வற்றின் நிறத்திற்கு ஏற்ற வண்ணங்களாற் குழைத்தெழுதிக் காட்டப்பெற்றுத் திகழ்வ தொன்றாகும்; அழகியவற்றோடு அருவருப்பாவனவுங் கலந்து காணப்படுமாயின்; அவற்றுட் பின்னையவற்றை நீக்கி முன்னைய வற்றை மட்டுமே தெரிந் தெடுத்து வரைகுவன் கைவல் ஓவியன்; ஒரோவொருகால் அவன் திருத்தமான வடிவங்களின் தோற்றத்தை மேலுஞ் சிறப்பாக விளங்க வைத்தற் பொருட்டுத் திருத்தமில்லாதவகைகளையும் உடன் வைத்து வரைய வேண்டுவனாயின், அவற்றின் அருவருப்புத் தன்மையைப் பலபடியாற் குறைத்து வரைகுவனே யன்றி, அதனை யுள்ளவாறே வரைந்து நமது சுவையுணர்வினைக் கெடுப்பான் அல்லன்; எனவே, அவன் பலநாளும் பலமுறையும் ஆய்ந்தாய்ந்து பார்த்துத் தான் வரையும் பொருள் வடிவங்களை இயற்கையிற் காணும் அளவினும் அழகுசெய்து, பகலவனொளி படும் பகுதி ஒளிரவும் அது படாத பகுதி சிறிதே இருளவும் வண்ணங்களை ஆற்றித் தொட்டெழுதி, அங்ஙனம் எழுதிய ஓவியத்தைக் காண்பதெல்லாம் “ஆ! இஃதியற்கையை எவ்வளவு ஒத்திருக் கின்றது! எனினும், ஈது இயற்கையழகினும் எவ்வளவு சிறந்து துலங்குகின்றது!” என்று வியந்துகூறிப் பெரிதும் இன்புறச் செய்யுஞ் செயற்கருஞ் செய்கைத்திறனுடையனாமென்றுணர்ந்து கொள்ளல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/36&oldid=1581994" இலிருந்து மீள்விக்கப்பட்டது