உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

❖ LDM MLDMOшLD-14 →

இங்ஙனம் இருவேறுவகையவாய், அமைக்கப்படும் படங்களுள் நிழலுருப்படத்தை யொப்பதே வரலாற்று நூலா மென்பதூஉங், கைவல் ஓவியன் வரைந்த அரிய ஓவியத்தை யொப்பனவே கதைகள் நாடகங்கள் காவியங்களாகு மென்பதூஉம் நினைவிற் பதிக்கற்பாலனவாகும். இயற்கையிற் காணப்படும் பல்வகைப் பொருள்களையும் அவற்றின் நிகழ்ச் சிகளையும் அவ்வியற்கையிலுள்ளவாறே வகுத்துரைக்குமாற்றில் வரலாற்று நூல்கள் நிழலுருப்படங்களையே ஒப்பனவாகும். மற்று, இயற்கையி லுள்ளவற்றை அவ்வவ்வற்றின் இயல்புக்கு மாறாகாமலே, மேன் மேற் றூய்மைசெய்து மேன்மேல் அழகுசெய்து, தன் அறிவியல் நுட்பமுந் தன் அழகியலுணர்வும் அவற்றின் அமைப்பினூடு விரவி விளங்கச் சான்றோ னொருவனால் யாக்கப்படுமாற்றிற் கதை நூல் முதலியன விழுமிய ஓவியங்களையே யொப்பனவாகும். இயற்கைக்கு முற்றும் மாறுபட்டுக் காணப்படும் ஓ வியங்களை நோக்குவார். அவற்றைக்கண்டு மகிழாமல் “ஈதென்னை! உலகத்தில் எங்குங் காணப்படாத பொய்வடிவாய் இருக்கின்றதே!' என்று இகழ்ந்துபோதல் போல, உலகவியற்கை மக்கள் இயற்கைக்கு முழுமாறாய் ஆக்கப்பட்ட கதைகள் நாடகங்களைக் காணும் அறிஞர் அவற்றின் பொய்ம்மை கண்டு அவற்றைப் பாராட்டாது புறத்தொதுக்குவர்.

அற்றேல், இயற்கையோ டொத்தவற்றில் நமக்கு மகிழ்ச்சி மிகுதலும், ஒவ்வாதவற்றில் அருவருப்புண்டாதலும் என்னை யெனின்; மக்கள் மனநிலை உள்ளதை உள்ளவாறு அறிதலிலேயே வேட்கை மிகுந்து நிற்கின்றது; அதுதான் அங்ஙனம் நிற்கவேண்டுவ தென்னையெனின்; உண்மையுணரும் அறிவினாலேயே மக்க ளெல்லாரும் உயிர்பிழைத்து வாழவேண்டியவர்களாய் இருக்கின்றார்கள். பசித்து உண்ணவேண்டி யிருப்பவனுக்குத் தனக்கேற்ற உணவையறிந்து உட்கொள்வதில் வேட்கையிருக்குமே யல்லாமல், உணவுப்பண்டங்களைப்போல் மெழுகாலும் நெட்டியாலுஞ் செய்யப்பட்டவைகளையெல்லாம் அறியாமல் உணவென நம்பி யுட்கொள்வதில் வேட்கை செல்லாது; நீர் வேட்கை மிகுந்தவனுக்கு நறுந் தீம்புனல் பருகுவதில் விழைவு மிகுமேயல்லாமல், தீம்புனல்போற் பொய்யாகச் செய்து வைக்கப்பட்ட நச்சுநீரைப் பருகுவதில் விழைவு செல்லாது, தமது பசிக்குந் தமது விடாய்க்கும் வேண்டுவன இவைதாம் என

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/37&oldid=1581995" இலிருந்து மீள்விக்கப்பட்டது