உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

9

உண்மையாக அறிந்தாலன்றி, எவரும் எதனையும் வெறுந் தோற்றத்தளவில் மயங்கி உட்கொண்டு விடக் காண்கின்றோ மில்லையே. அல்லதெவரேனும் அறிவுமயங்கி நஞ்சையுணவாகப் பொய்த்துணர்ந்து உட்கொள்வராயின், அவர் தமதுயிரிழத்தலுங் காண்டுமென்றே, ஆக, உயிர்வாழ்க்கை இனிது நடைபெறுதற்கே பொருள்களை உள்ளவா றுணர்தல் இன்றியமையாது வேண்டப் படுவதாயிருக்க, உயிர்வாழ்க்கையோடு இன்ப அறிவு வாழ்க்கையும் நன்கு வாய்த்தற்கு உண்மையுணர்ச்சி இன்னும் எத்துணை இன்றியமையாததாய் வேண்டப்படும்! உண்மையுணர்ச்சி இத்துணைச் சிறந்ததாய் இருத்தலினாலேயே, நாம் பயிலுங் கதைகள் நாடகங்கள் காப்பியங்கள் முதலிய நூல்களிற் கூறப்படும் நிகழ்ச்சிகள், நம் பழக்க வழக்கங்களிற் காண்கின்ற படியே ண்மை வழாது நுவலப்பட்டிருத்தல் காணிற்பெரிது மகிழ்ந்து அவைதம்மை மிகப்புகழ்ந்து பேசுகின்றோம்.

மேலும், நம்மோடொத்த மக்கள் எவ்வெவ் வகையான யற்கையுடையரா

யிருக்கின்றனர்? அவர்கள் தத்தம் இயற்கையால் எவ்வெவ்வகையான செயல்களைச் செய்கின்றனர்? தாஞ் செய்யும் அச்செயல்களால் துன்பத்தையடைகின்றனரா? இன்பத்தை யடைகின்றனரா? ஒருவரது செயலால் அவர்க்குப் பகையாம் நிலையிலோ உறவாம் நிலையிலோ நிற்பவர்கள், அவரைப் பகைத்தோ அல்லதவரோடு உறவாடியோ எங்ஙனம் ஒழுகு ழுகுகின்றனர்? அவ்வெவ்வேறு ஒழுக்கத்தால் அவரும் ஏனையோரும் எய்தும் முடிவுகள் யாவை? என்று இவ்வா றெல்லாம் நாம் அவரவர் இயற்கை செயற்கை வரலாற்று முடிபுகளை யறிந்து கொள்வதிற் பேராவல் வாய்ந்தவர்களா யிருக்கின்றோம். உணர்ச்சியில்,

ங்ஙனம் உணரும் த

நல்லவராயினார் இன்புறக் கண்டால் நாமும் இன்புற்றும், அவர் துன்புறக்கண்டால் நாமுந் துன்புற்றும் ஒழுகும் இயல்பு நம்மெல்லா ரிடத்தும் அமைந்து நிற்கின்றது. இன்னுந், தீயராயினார் தமது தீய செயலால் துன்புறக் கண்டால் அஃது அவர்க்குத் தகும் என்னும் மனநிறைவும், அவர் அங்ஙனந் துன்புறாமற் செவ்விய வாழ்க்கையிற் களித்து இறுமாந்திருக்கக் கண்டால் ‘இத் தீயரும் இங்ஙனம் வாழ்தல் தகுமோ! இறைவனே நீ உளையோ!” என்னும் மனப்புழுக்கமும் அடைபவர்களா யிருக்கின்றனம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/38&oldid=1581996" இலிருந்து மீள்விக்கப்பட்டது