உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

மறைமலையம் -14

வையேயன்றி, இங்ஙனம் பலதிறப்பட்டவராய் இருக்கும் மக்கள் தாந்தாம் பிறவியெடுக்குங்கால் எவ்வெக்குடும்பத்தில் எவ்வெவ்விடத்திற் போந்து எவ்வெவ்வாறு வளர்ந்து வந்தனர்? அங்ஙனம் வளர்ந்து வருங்கால் அவர் எவ்வெக்காலத்திற் செய்த செயல்கள் எவ்வெப்பயனைத் தமக்கும் பிறர்க்கும் விளைத்தன? அவர் பிள்ளைமைப்பருவந் தொட்டுக் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று நுகர்ந்துவந்த உலகியற் பொருள்கள் யாவை? அவை தம்மால் அவருடைய உணர்வும் பண்புஞ் செயலும் எவ்வெவ்வாறு உருவாகிப் புறத்தே புலனாயின? என்று உலக இயற்கைக்கும் மக்கள் மனவளர்ச்சிக்கும் உள்ள உறவும் பயனும் அறிவதிலும் நாமெல்லாம் மிக்க வேட்கை வாய்ந்தவர்களா யிருக்கின்றனமே. இவ்வாறெல்லாம் மக்களுள் ஒவ்வொருவரின் இயற்கைகளும் அவற்றின் புறநிகழ்ச்சிகளும் ஒன்றோடொன்று சன்னல் பின்னலாகப் பிணைக்கப் பட்டிருத்தலுடன்,இப்பிணைப்பு, இடத்திலுங் கால இயக்கத்திலும் பொருந்திக் கிடக்கும் உலகியற் பொருள்களோடும் மிக நெருக்கமாக விரவி நடைபெறுகின்றன

வல்லவோ?

ஆகவே, இத்துணைப் பிணைப்புகளோடுங் காணப்பட்டுச் செல்லா நின்ற மக்களியற்கை உலகவியற்கைகளை அளந்து ஆராய்ந்து கண்டு, அப்பிணைப்புகளின் சிக்கலை விடுவித்து, ஒவ்வொன்றனையும் இழையிழையாகத் தம் உணர்வினாற் பிரித்துப் பார்த்தும், பின்னர் அவற்றை இயைத்துப் பார்த்தும், அவற்றால் மக்கள் அடையும் முடிபுகளைச் சுவைதுளும்பத் திறனாக அமைத்துக்காட்டும் நல்லிசைப்புலவரே கதைகள் நாடகங்கள் காப்பியங்கள் இயற்றுதற்குரிய ரென்றுணர்ந்து கொள்க.

அற்றேல், நாடகங்கள் காப்பியங்களுக்குங் கதைகளுக்குந் தம்மில் வேறுபாடு என்னையெனிற், கூறுதும். பழையகாலத் தமிழில் இம்மூன்றுஞ் செய்யுள் வடிவிலேயே இயற்றப்பட்டன. மற்று, இக்காலத்திலோ காப்பியங்களைத் தவிர ஏனை இரண்டும் உரை நடையிலேயே பெரும்பாலும் இயற்றப்படுகின்றன. ஓராயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன் மாணிக்கவாசகப் பெருமானால் அருளிச் செய்யப்பட்ட திருச்சிற்றம்பலக் கோவையார் என்னும் நாடகத்தமிழ்நூல் வடித்த செந்தமிழ்ச் செய்யுட்களினாலேயே ஆக்கப்பட்டிருக்கின்றது. இற்றைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/39&oldid=1581997" இலிருந்து மீள்விக்கப்பட்டது