உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

மறைமலையம் -14

காளி கோட்டத்திற்கு அம்மையை வழிபடச் சென்றோம். வழிபட்ட பின், அதனைச் சார்ந்துள்ள குகைகளையெல்லாம் போய்ப்பார்த்தோம். அவற்றுள் ஒன்றிற் சென்றுபார்க்க எங்களுக்குண்டான வியப்பையும் இரக்கத்தையும் என்என்பேன்! மிக நல்லவரும் அறிவிற் சிறந்த முதியருமான கோகிலத்தின் மாமனாரும் அவர் தம்பெண்மகவும் இறப்பதற்குக்காரண மாயிருந்த அவரின் இரண்டாம் மனைவி அங்கே இறந்து கிடந்தாள்! அவள் என்மனைவியின் வளர்ப்புத் தந்தையுடன் தீதுசெய்யவந்து, பிறகு யாருமற்ற அகதியா யிறந்தாளென அறிந்தோம்.

யான் தங்கள்

நூல்களைக்கற்றும்

பெருமானே, விரிவுரைகளைக் கேட்டும் அறியப்பெறாத அரும்பொருள்களை யெல்லாம் அறிந்தேன்; என் மனைவி தங்கள் நூல்களைக் கற்று நல்லறிவு நிரம்பினாள். யாங்கள் தங்களாற் பெற்ற பெறற்கரிய பேற்றை எழுமையும் மறவேம். சிவம் இயற்கையாக விளங்கும் இட ம் அனற்பிழம்பே எனத் தாங்கள் விளங்கிய உண்மையை இந்தப் பாரசிகசமயத்திற்கண்டு அதனை நேரேவணங்கி வாழ்கின்றோம்.

கோகிலாம்பாள் கடிதம் - முற்றும் -

பொருள்வழிப் பிரிக்கப்பட்ட புதினம் தலைப்பின்கீழ் உள்ள "கோகிலாம்பாள் கடிதங்களுடன்" (மறைமலையம்-14) "மறை மலையடிகளார் கடிதங்கள்” எனும் தலைப்பும் சேர்க்கப்பட்டுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/317&oldid=1582624" இலிருந்து மீள்விக்கப்பட்டது