உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

287

பின்னுரை

கோகிலம்பாளின் காதற்கணவன் தெய்வநாயகத்தால் இது மறைமலை அடிகட்கு எழுதப்பட்டது.

அன்பும் அருளும் ஒருங்கு குடிகொண்ட அடிகளின் திருவடித் தாமரைகளைத்தொழுது அடியேன் தெய்வநாயகம் பணிவுடன் வரைவன...

டி

அடியேங்கள் உய்ய எழுந்தருளிய ஐயனே, என் மனைவி கோகிலாம்பாளும் யானும் அவடன் பெற்றோர்களால் ஓர் ஆண்டிற்கு முன் பம்பாய் நகரத்தில் மனம்உவந்து மணஞ் செய்விக்கப்பட்டு, அருமை பெருமையிற் சிறந்த அவடன் குடும்பத்தாரோடு சேர்ந்தே இனிது வாழ்ந்து வருகின்றோம். என்மனைவியின் வேண்டுகோளுக்கு இணங்கியுந், தென்னாட் ன்கண் உள்ள நம் தமிழ்மக்களுக்கு உயர்ந்த நல்லெண்ணங்கள் வளரவேண்டுமென விரும்பியும் அவள் எனக்கெழுதிய கடிதங்களைத் தங்கட்கு அனுப்பியிருக்கின்றேன். யான் என்சிற்றறிவுக்கு எட்டியமட்டிற் சில திருத்தங்களை அவற்றின்கட் செய்திருக்கின்றேன். பேரறிவுநிரம்பிய அடிகள், அவற்றைத் திரும்பவும் பிழைபார்த்துத்திருத்தி அச்சிட்டுப் புத்தகமாக வெளிப்படுத்தும்படிவேண்டுகின்றோம். அடிகட்கு இவ்வளவு வருத்தந்தரும் எளியேங்கள் பிழையினைப் பொறுத்தருளல் வேண்டும்.

கோகிலாம்பாளின் தமையன் மனைவி ஆறு திங்களுக்கு முன் தான் மங்கைப்பருவம் அடைந்தனள். அவன் அவளை அழைத்துக் கொண்டு சென்ற திங்கள் தான் பம்பாய்க்குவந்து எங்களுடன் கலந்துகொண்டான்.

நல்லோரை, அழிக்க முயல்வோர் தெய்வத்தால் அழிக்கப் படுவரென்பதற்கு மற்றும் ஒன்று கண்டோம். எனக்கு மணம் நடந்தவுடனே கோகிலாம்பாள் மீண்டுவந்த மலைக்குகைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/316&oldid=1582623" இலிருந்து மீள்விக்கப்பட்டது