உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

வண்ட ாமரை

மறைமலையம் -14

தமக்கையுமாதலைத் தெரிந்தவுடனே உண்மையான என் ஒரே அருமைத் தங்கைக்கு உண்டான அளவிலா மகிழ்ச்சியை என் என்பேன்! என் அருமைத் தம்பிமார் நால்வரிற் சிறிது அறிவு கூடப்பெற்ற பிள்ளைகள் மூவரும் என்னையுந் தமையனையுங் கட்டிக் கட்டி முத்தமிடுகின்றனர்; கைக் குழந்தையுங் கூட எமது உறவின் நெருக்கத்தை உணர்ந்தாற்போற் பெரும்பாலும் எங்களிடத்திலேயே மகிழ்வுடன் இருக்கின்றது. குளிருந் தெளி நீருடை ய ஓர் அழகிய குளத்தின்கண் அலர்ந்த செந்தாமரை மலர்களினிடையிடையே வெள்ளல்லி சவ்வல்லி களாகிய சிறுசிறுமலர்களும் ஒருங்குகூடித்தோன்றி விளங்கினாற் போல, எமது இனிய மாளிகையில் என் பெற்றோர் பாட்டன் பாட்டிமார்களினிடையே ஒருதாய் மக்களாகிய நாங்கள் கூடிக் களிக்கின்றோம். சென்னையில் என் பெரிய அன்னை யிடமிருக்கும் என் அருமைத் தங்கை தனலட்சுமி என் கூடப் பிறந்தவள் அல்லளென்று உணர்ந்தே னாயினும், அவளுடைய அறிவும் நல்லியற்கையும் என்நெஞ்சிற் பதிந்திருத்தலால் அவளையும் எங்களுடன் சேர்த்துக் கொள்ள விழைந்தேன்; ஆனாலுந், தன் கணவனை யிழந்த என் பெரிய அன்னைக்கு அவள் தன் கணவனை எம்வழிக்கு இழுப்பது அவர்கட்கு வருத்தமாயிருக்குமென் றெண்ணினேன்.

இனி, இவ்வளவு மகிழ்ச்சிகட்கு இடையிலும் என் காதல் வலிமையுடன் தோன்றி என் நெஞ்சை ஊடே ஊடே வாட்டுகின்றது. பசி நீக்குதற்கு உரிய எல்லா இனிய உணவுப் பண்டங்களுந் தன்னைச் சூழ இருப்பினும் நீர் வேட்கையால் நா வறண்டவனுக்கு முதலிற் குடிநீரே இன்றியமையாது வேண்டி யிருத்தல்போல, ஏழையேனும் என் காதற்பெருமானாகிய தங்களைப் பெறுதற்கே ஏக்க முற்றிருக்கின்றேன்.வேனிற்காலத்து வெயிலால்வறளுஞ் செங்கழுநீர் மலரின் இதழ்கள் பனிக் காலத்துப் பனித்துளிகளால் நனைந்து எவ்வளவு செழுமை யாயிருக்கின்றன! அதுபோல் என்னை யொத்த மங்கையருந் தங்காதலர் அன்பினால் நனைந்தன்றோ உள்ளங் கிளர்ந்து விளங்குவர்! எனது இந்நிலைமையினை யுணர்ந்து என் பெற்றோர்கள். நமது திருமணத்திற்கு வேண்டும் ஏற்பாடுகளை விரைந்து செய்கின்றனர். திருவருள் விரைவில் நம்மை ஒருங்குகூட்டும்! நலம்!

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/315&oldid=1582622" இலிருந்து மீள்விக்கப்பட்டது