உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

285

பம்பாய்க்கு வந்துவிட்ட பிறகு, என் பாட்டியையுந் தாமிருக்கும் இடத்திற்குக் கொண்டு போன போது,அப் பாட்டி சிறுபிள்ளையாயிருந்த சேதுராமனையுந் தன்னோடு உடன் கொண்டு சென்றனர். அவனை ஓர் அகதிப் பிள்ளை யென்று சொன்னதன்றி, அவனைப் பற்றிய வரலாறுகளை என் பாட்டன் மாமனுக்குங் கூட என்பாட்டி சொல்லவில்லை. அவன் வளர்ந்து திருடர்களுக்கு உளவாய்ப் பலநாடு நகரங்களிற் போய்வருமாறு பழக்கப்படுத்தப்பட்ட பின் அவன் சென்னைக்குப் போம்படி நேரும் போதெல்லாம், தன் மூத்தமகள் அவள் கணவன் அவர்பிள்ளைகளைப் போய்ப்பார்த்து வரும் வண்ணம் என் பாட்டி ஏவுவராம். ஆனால் சேதுராமனுக்கும் அவர்கட்குந் தமக்கும் உள்ள நெருங்கிய உறவைக்குறித்து அவனுக்கு என் பாட்டி ஏதுமே தெரிவித்ததில்லை. ஏனென்றால், தன் இளையமகள் மறைவிற் பெற்ற பிள்ளைகளை மாற்றி, மூத்தமகள் பிள்ளைகளை வேறோரிடத்திற் சேர்ப்பித்த வகைகளெல்லாந் தெரிந்தால் எல்லாருந் தன்னை அருவருக்கும்படி நேருமென்று நினைத்தே என் பாட்டி அவைகளை முற்றும் மறைவாய் வைத்தனர்.சேதுராமன் சென்னைக்கு வந்த காலங்களி லெல்லாம் என் வளர்ப்புத்தந்தையைப் பார்த்தானேனுந் தன்னை ஓர் அகதிப் பிள்ளையாகவே அவருக்குச் சொன்னானென்றும், அதன்பின் அவரால் ஏவப்பட்டுத் தங்களுடன் சிலகாலமும் பம்பாயில் என் தந்தையாருடன் சிலகாலமும் இருந்து உளவுகள் சொல்லி, அதன் பின் அவருடன் சேர்ந்து கள்வர்களைத் தூண்டி எங்களை யெல்லாம் மலைக்குகைக்குச் சிறையாய்ப் பிடிப்பித்துச் சன்றானென்றும் உய்த்துணர்ந்தோம். என் மாமனும் என் வளர்ப்புத்தந்தையும் மலைநாட்டிற் சந்திப்பதற்குமுன் ஒருவரை யொருவர் பார்த்ததுமில்லை, தமக்குள் உள்ள உறவைப்பற்றி முன்பின் தெரிந்ததுமில்லை. ஆகவே, சேதுராமனும் என் வளர்ப்புத்தந்தையும் அடைந்தமுடிவு எங்கட்குப் பெரிதும் இரக்கத்தை உண்டாக்கியது!

என் ஆரூயிர்ப்பெருமானே, என்னைவருந்திப்பெற்ற என் உண்மைப் பெற்றோர்களுடன் யான் இப்போது வந்து சேர்ந்திருக்கும்படி, பலபெருந் துன்பநிகழ்ச்சிகளை விளைவித்து அவற்றினூடு என்னைச் செலுத்திய இறைவன் திருவடிகளுக்கு ஏழையேன் எங்ஙனங் கைம்மாறு செலுத்தவல்லேன்! என் தாய் தந்தையரை வானுலகத் தெய்வங்களாகவே வணங்கி வருகின்றேன். என் தமையனும் யானுந் தமக்கு உண்மையான தமையனுந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/314&oldid=1582621" இலிருந்து மீள்விக்கப்பட்டது