உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

❖LDMMLDMOшILD -14❖

5 - கடிதம்

15-1-47

அன்பிற் சிறந்த திருவாளர்.... அம்பலவாணர் அம்மை திருவருளால் எல்லா நலங்களும் உண்டாகுக! 13-ஆம் நாள் தாங்கள் அன்புடன் எழுதிய கடிதம் வந்தது. தங்களுக்கு உடம்பு நலம் இல்லாதிருந்தது தெரிந்து வருந்தினேன். நீங்கள் முழு நலத்துடன் வாழும்படி சிவபிரானை வேண்டுகிறேன். இந்தப் பனிக் காலத்தில் அடிக்கடி தலை முழுகவேண்டாம். இரண்டு நாட்களுக்கொருகால் ஒரு முரட்டுத் துணிையை வெந்நீரிற் றோய்த்துப் பிழிந்த பின் உடம்பெங்கும் தேய்த்து உடம்பழுக்கை எடுத்துவிடுங்கள்.

உடம்பில் சட்டை எந்நேரமும் பூண்டிருத்தல் வேண்டும். நாடோறும் தோய்த்து உலர்ந்த ஆடைகளையே உடுத்தல் வேண்டும். காலை 9 மணி வரை ஏதோர் உணவையும் உட்கொள்ளாமல் வெந்நீரையே பருகுதல் வேண்டும். காலை 10 மணிக்கு எளிதிற் செரிக்கத்தக்க நெகிழ்ந்த உணவு உட்கொள்ளுதல் நன்று.நண்பகல் ஒரு மணிக்கு மிகுந்த குளிர்ச்சியும் மிகுந்த சூடும் இல்லாத உணவை எடுத்தலே நல்லன. 10 நாட்களுக்குகொரு கால் தூய நல்லெண்ணெயில் ஓமம் இட்டுக் காய்ச்சியதைத் தேய்த்து வெந்நீரில் முழுகி அரைமணி நேரம் கழித்து மிளகுநீர் சேர்த்த சோறு உண்ணுதல் நன்று. இரவில் கோதுமை நொய்க்கஞ்சியும் வற்றலும் நல்லன. இப்போது நீங்கள் வெளியிடும் நன்முயற்சியில் நூல் ஆக்கிய எமது உழைப்புக்காக எனக்குத் தாங்கள் தர இசைந்த ஏழாயிர ரூபாயில் இப்போது நீங்கள் தருவதாகச் சொல்லும் ஆறாயிர ரூபாயையும் அதன் பின் இரண்டல்லது மூன்று தினங்கள் கழித்து மிச்சம் ஆயிர ரூபாயையும் பெற்றுக்கொள்ள இசைகிறேன். தங்களருமைத் தந்தையாருடன் தாங்கள் இங்கு வந்து தொகையை என்னிடம் சேர்ப்பிக்கும் போது உடன்படிக்கை எழுதிக்கொள்ளலாம். தூத்துக்குடியில் திருஞான சம்பந்தமூர்த்தி மடாலயச் சைவ சித்தாந்த சபையின் 63- ஆம் ஆண்டுவிழாப் பேரவை முதல் இரண்டு நாட்கள் எனது தலைமையிலும், மூன்றாம் நாள் பாகம் பிரியாள் மாதர் சங்கத்தின் 19-ஆம் ஆண்டு விழாப்பேரவை எம் அருமைப் புதல்வி திரிபுரசுந்தரி அம்மையாரின் தலைமையிலும் மிகவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/327&oldid=1582636" இலிருந்து மீள்விக்கப்பட்டது