உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

மறைமலையம் -14 11 - உலக வாழ்வு

29-12-1933

சுவாமி வேதாசலம்

மறைமலையடிகள்,

பொதுநிலைக் கழக ஆசிரியர்

திருமுருகன் அச்சுக்கூடம் பல்லாவரம்

அன்புமிக்க கண்ணப்ப முதலியாருக்கு அம்பலவாணர் அம்மை திருவருளால் எல்லா நலங்களும் மேன்மேற் பெருகுக! 23 ஆம் நாள் நீங்களெழுதிய கடிதத்தால் உங்கள் அருமை மனைவி சடுதியில் இம்மை வாழ்வு நீத்தமை தெரிந்து இங்கு எல்லோரும் மிக வருந்தினோம். ஊழ்வினையும் நம்மவர் நன்கு வாழத் தெரியாமையுமே இங்ஙனம் நேரும் முதிராச் சாக்காடு கட்குக் காரணமாகும்.

உயிரோடிருக்கையிலே

தெரிவித்திருந்தால்

போய்

முகத்தையாவது காணலாமே என்று இங்கு வீட்டம்மை சொல்லித் துயருறுகின்றாள். தாயில்லாக் குழந்தைகளுடன் தனியே வருந்தும் நுங்கள் நிலையை நினைந்து எமது நெஞ்சம் நெக்குருகுகின்றது! நம் ஆண்டவன் நுங்கட்கும் நுங்களருமைக் குழந்தைகட்கும் ஆறுதல் அளித்து நுங்கள் வாழ்க்கையை இனிது நடத்துக வென்று அவன் திருவடிகளை இறைஞ்சுதும்.

அன்புள்ள,

மறைமலையடிகள்

12 ஆறுதல் மொழிகள்

அன்புள்ள....

சுப்பிரமணியன் வழிவிடுத்த கடிதம் எங்களை மிகவுந் திடுக்கிடச் செய்து உள்ளத்தை வருத்தியது. இப்போது பிறந்த உங்கள் அருமை மகவு திடீரென இறந்துபோன செய்தி நெஞ்சத்தை நீராய் உருக்கிற்று. பிறப்பும் இறப்பும் நம்முடைய ஆற்றலில் அகப்படாமல் நடத்தலால், நாம் செய்யக்கூடிய தொன்றுமில்லை. தாய்க்கு என் ஆறுதல் மொழிகளைத் தெரிவியுங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/331&oldid=1582642" இலிருந்து மீள்விக்கப்பட்டது