உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் கடிதங்கள்

303

மற்றைக் குழந்தைகளின் நன்மையைக் கோரித் தாய் மனத்தைத் தேற்றிக் கொள்ளல் வேண்டும். நீங்களும் ஆறுதலாய் இருங்கள். கடுமையான மழை காலையிலிருந்து நடுப்பகல் வரையிற் பெய்தது.

அம்பலவாணர் திருவருளாலும் நுங்கள் நல்லெண்ணத் தாலும் குழந்தை அம்பலவாணன் சிறிது சிறிதாக நலமெய்தி வருகின்றான்.

13 -

-

ஆறுதல்

17-6-45

எல்லா நலங்களும் பெருகுக!

உங்கள் நேற்றைக் கடிதத்தால் உங்கள் அருமைத் தந்தையார் காலமான செய்தி யறிந்து வருந்தினோம். உங்களையெல்லாம் பெற்று வளர்த்து நன்னிலையில் வைத்துத் தமது கடமையை நன்கு செய்து முடித்த நுங்கள் தந்தையாரான பெரியார் சிவபெருமான் திருவடி நிழலில் அமர்ந்து ஆறுதல் எய்திப் பேரின்பம் நுகர்ந்திருப்பாராக!

உங்கள் அருமைத் தாயார் முதலான உங்கள் குடும்பத்தார் அனைவர்க்கும் எங்கள் ஆறுதல் மொழிகளைத் தெரிவியுங்கள்.

அன்புமிக்க,

மறைமலையடிகள்

14 - இனிது வாழ்வீர்களா

13-5-50

அன்புமிக்க கனகராயர்க்குச் சிவபிரான் றிருவருளால் எல்லா நலங்களும் பெருகுக!

நீங்கள் அன்புகூர்ந்து விடுத்த கடிதத்தால் நுங்கள் சிற்றன்னை இவ்வுலக வாழ்வு நீத்து மேலுலகு சென்றமை தெரிந்து, நாங்கள் எல்லோரும் மிகவும் துயருற்றோம். அவ்வம்மையார் இனிய குணங்கள் உடையவரென்றும், எல்லாரிடத்தும் முகமலர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/332&oldid=1582643" இலிருந்து மீள்விக்கப்பட்டது