உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304

மறைமலையம் -14

ஒழுகி இல்லற வாழ்க்கையை நன்கு நடத்தியவரென்றும் தெரிந்து, அவர்தம் அருமைக் கணவனாரையும் இனிய குழந்தைகளையும் விட்டுப் பிரிந்து இளம் பருவத்திலேயே இவ்வுலக வாழ்வு நீத்தமைக்காக எம் உள்ளம் மிக வருந்தாநிற்கின்றது. ஆனாலும்,

முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவில் ஒரு

பிடிசாம்பராய் வெந்து மண்ணாவதுங்கண்டு பின்னும் இந்தப் படிசார்ந்த வாழ்வை நினைப்பதிற் பயனில்லை யாதலால்

அவ்வம்மையாரின்

அடியினை

அரியவுயிர் அம்பலவாணன்

யினை மலரின் கீழ் வைகி இளைப்பாறுக வென்று அவன் திருவருளை வேண்டுகிறோம். உங்கள் எல்லார்க்கும் ஆறுதல் சொல்லும் பொருட்டு என் மனைவியையும் மகனையும்

அனுப்பியிருக்கின்றேன்.

L

நீங்கள் எல்லீருஞ் சிவபெருமான் திருவருளால் இனிது வாழ்வீர்களாக!

இங்ஙனம்

அன்புள்ள,

மறைமலையடிகள்

15 - தமிழ்த்தொண்டு -சிவத்தொண்டும்

அன்புமிக்க கனகராயர்க்குத் திருவருளால் எல்லா நலங்களும் பெருகுக!

நுங்கள் அன்புள்ள 7 ஆம் நாட் கடிதமும் அதனுடன் அனுப்பிய தசாங்க ஊதுவர்த்தி மாதிரியும் வந்தன. தசாங்கம் அவ்வளவு நல்லதன்று; மிகுதியாகப் புகைகிறதே யல்லாமல் மணம் நன்றாயில்லை. ஊதுவர்த்திகள் நல்லவை; ஆனால் அவை மிக மெல்லியவாய் இருக்கின்றன; ஆகையால், சிறிது மொத்தமான ஊதுவர்த்திகள் வாங்குங்கள். தசாங்கம் இன்னும் வேறு கடைகளில் உள்ளவைகளும் மாதிரியாக வாங்குங்கள்.

இங்கே...அச்சுக்கூடம் வேலை ஒழுங்காகச் செய்கிறதில்லை. வருகிற சில்லரை வேலைகளையும் கெடுத்து விடுகின்றான். எது செய்தாலும் ஏறுக்குமாறு செய்கின்றான். சிறிதுந் திருந்தாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/333&oldid=1582645" இலிருந்து மீள்விக்கப்பட்டது