உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் கடிதங்கள்

305

எந்நேரமும் மனத்தைப் புண்படுத்தி வருகின்றான். இவனை எந்த வேலையிலாவது வெளியே வைத்தால்தான் யான் அமைதியாய் இருக்கமுடியும்.

மன

யான் மிகுதியாக நூல்கள் எழுதிவி எழுதிவிட்டபடியாலும், செலவான நூல்களை அடுத்தடுத்து அச்சிடவேண்டி வருவ தாலும், ஓரெழுத்தாவது எழுதி எனக்கு உதவி செய்பவர்கள் யாரும் இல்லாமையாலும் யான் படுந் துன்பத்திற்கு அளவே யில்லை. நாளேற நாளேற நூல்வேலை மிகுதிப்படுகின்றதே யல்லாமல், தக்கபடி ஆளுதவியில்லை. நான் செய்யும் தமிழ்த் தொண்டு சிவத்தொண்டு இன்னுஞ் சில காலமாவது செவ்வையாக நடைபெற வேண்டுமானால் எனக்கு உதவி செய்யத்தக்க ஆளை நீங்கள் விரைந்து தருதல்வேண்டும். இதுவரையில் நீங்கள் எனக்குச் செய்து வந்த உதவிகளெல்லாம், இப்போது நீங்கள் செய்யும் இப்பேருதவியினாலேதான் நிலைபெறல் வேண்டும். சிவபெருமான் நுங்கட்கு எல்லா நலங்களையும் பெருகச் செய்வான். நுங்களைவிட எனக்கு வேறு உண்மையன்பர் எவருமில்லை. உண்மையன்புடைய நுங்களால் தான் இவ்வுதவி யான் பெறல் வேண்டும். இதன்பொருட்டு நீங்கள் செய்யும் ஏற்பாட்டுக்கு இணங்கத் தடையில்லை.

இப்பேருதவிக்காகச்

இந்தச் சனிக்கிழமை மாலையே கட்டாயம் நீங்கள் இங்கு வரவேண்டும். நுங்கள் எல்லீர் நலமுங் கோரித் திருவருளை வழுத்தும்.

16 பெண்மக்கள்

அன்புள்ள,

மறைமலையடிகள்

19-12-42

திருவருளால் நல்லெண்ணமும் நல்லறிவும் உடல் நலமும் கல்வியும் உண்டாகுக!

கோடி கோடியாக ஊரார் கல்வி வளர்ச்சிக்கென்று தந்த பொருளை வைப்பாட்டிமார்க்கும், தாசி வேசிகட்கும், கொலை வழக்குகட்கும் வாரி இறைத்துக்கொண்டு, கல்விக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/334&oldid=1582647" இலிருந்து மீள்விக்கப்பட்டது