உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306

❖ LDM MLDMOLD-14 →

மற்றோர்க்கும் நூல் எழுதுவார்க்கும் ஏதொருதவியும் செய்யாத மடாதிபதிகளாகிய துறவிகளைப் பெருத்த அவமானமாகக் கருதுவாரும் எவரும் இல்லையே! எல்லாரும் அவர் காலிற் போய் விழுந்து, அவர் வீசும் எச்சிற் சோற்றை யுண்டு அவரைப் புகழ்ந்து பாடியும் வருகின்றார்களே! ஈதன்றோ கடியத்தக்க பேரவமானச் செயல்!

6

அவ்வாறிருக்க, ஐம்பதாண்டுகளாகத் தமிழ்த் தொண்டு சிவத்தொண்டு செய்வதிலேயே ஒரு தொடர்பாக உறைத்து நின்று, எந்த வகையிலும் உதவி செய்வார் எவருமில்லாமலும், துவக்கத்தில் செல்வமின்றி வறுமைப்பட்டும், நாற்பத்தாறாண்டு களாகப் பாதுகாத்து என் மனைவி மக்களை மேல் நிலையை அடையச் செய்தேன்.

மனைவியையும் அருமைப் புதல்வனையும் அழைத்துக் கொண்டு தென்காசி, திருநெல்வேலி, திருச்செந்தூர், குலசேகர பட்டினம், மதுரை, திருச்சிராப்பள்ளி முதலான பற்பல நாடு நகரங்களுக்கெல்லாம் போய் விரிவுரைகள் நிகழ்த்தி வந்தேன். ங்காங்குள்ள அன்பர்களெல்லாம் எங்களை எதிரேற்று வேண்டும் சிறப்புக்களெல்லாம் செய்து எம்மைப் பாராட்டி னார்களே யல்லாமல், எவரும் எம்மைக் குறைகூறவில்லை.

ஒழுங்கான முறையில் மனைவியோடிருந்து இங்ஙனம் சிவத் தொண்டு செய்யும் செய்யும் முறையே ஒழுங்கான துறவுநிலை யாகுமென்றும், இவ்வாறின்றி மறைவாகப் பல வேசிமாரை வைத்துக்கொண்டு உலக நன்மைக்கு ஏதும் செய்யாத போலித் துறவுநிலைதான் கடியத்தக்கதென்றும் அன்பர்கள் ஆங்காங்குப் பேசிக்கொண்டார்கள். பெண்மக்களைப் பல துறையிலும் முன்னேற்றமடையச் செய்யவேண்டுமென்றும், அவர்களை அன்பிலும் தொண்டிலும் வளர்க்கவேண்டுமென்றும், மேடையேறிப் பேசுகின்றவர்களே வெளியே வந்து அவர்களை இழிவாகக் கருதுவதும், அவர்களின் அறிவு வளர்ச்சி கடவுளுணர்ச்சிக்காக ஓவியக் காட்சி, திருக்கோயில்கள், அவைக்களங்கள் முதலியவற்றிற்கு அழைத்துச் செல்வதை அவமானமாக நினைப்பதும் மாறுபட்ட செயல்களாகவும் இழிக்கத்தக்க ஒழுகலாறாகவும் காள்ளல் வேண்டும். துறவிகளென்றால் பெண்மக்களின் முன்னேற்றத்திற்குத் தடையாய் யிருக்கவேண்டும் போலும்! பெண்மக்களே உலக மென்பதை அறியாமல் அவர்களைப் பழித்துப் பேசிவிட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/335&oldid=1582650" இலிருந்து மீள்விக்கப்பட்டது