உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் கடிதங்கள்

307

பிறகு மறைவிலே அவர்கள் காலிற் போய் விழுந்து அவர்கள்பால் இன்பந் துய்க்க முயலுங் கயவர்களும் போலித் துறவிகளும் உலக நன்மைக்குப் பெருந்தடையாவார்களல்லரோ?

பெண்மக்களை ஓவியக் காட்சிக்கு அழைத்துப் போவதைக் குற்றமாகக் கருதுவது நன்றன்று. எத்தனையோ நாள் படித்தோ அல்லது கேட்டோ தெரிந்து கொள்ளவேண்டிய வரலாறுகள், புலவர் வீரர் வரலாறுகள் முதலியவைகளைக் கண்ணுக்குஞ் செவிக்கும் இன்பமாக எளிதிலே விளங்கும்படி காட்டும் ஓவியக் காட்சிகள் பெண்மக்கள் எளிதிலே முன்னேற்றமடையத் துணை புரிகின்றன. கற்றவர்களுங்கூட இவைகளைக் காண்பதனால் நுண்ணுணர்வும் இன்பமும் மன ஆறுதலும் அடைகின்றனர். குற்றமற்ற இவ்வின்பங்களைக் கண்டு களியாவிட்டால் துன்பம் நிறைந்த இவ்வுலக மக்களுக்கு வேறெந்த வகையில் எளிதிலே அறிவும் இன்பமும் உண்டாகும்? இறைவன் திருக்கோயில்களை டங்கடோறும் சென்று தொழாவிட்டால் பெண்மக்கள் பிறவி எடுத்ததனால் வேறென்ன பெரும் பயனை அடையக்கூடம்? இந் ன நன்மைகளின் பொருட்டாகவே பொன்னம்மையை ஓவியக் காட்சிகளுக்கும்

திருக்கோயில்களுக்கும் அழைத்துச் செல்கின்றேன். இதனைக் குற்றமாகக் கருதுங் கயவர்கள் விலங்கினும் கடைப்பட்டவராவர். இனி எழுதுவது மிகை. நீயும் உன் குடும்பத்தவரும் நலமுடன் நல்லெண்ணத்துடன் நல்ல செயலுடன் இனிது வாழும் படி சிவபிரானை வேண்டுகிறேன்.

அன்புள்ள,

17 கண்ணோய்

மறைமலையடிகள்

30-12-40 பல்லாவரம்,

அன்புருவாய்த் திகழும் கனகராயர்க்கு,

அம்பலவாணரம்மை திருவருளால் எல்லா நலங்களும்

உண்டாகுக!

நீங்கள் எழுதிய கடிதம் வந்தது. நீங்கள் கண்ணோயாலும் வாய்ப் புண்ணாலும் வருந்துவதறிந்து மிகத் துன்புற்றோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/336&oldid=1582652" இலிருந்து மீள்விக்கப்பட்டது