உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308

மறைமலையம் -14

சிவபிரான் திருவருளால் உடனே நோய் நீங்கி நீங்கள் முழுநலம் அடைவீர்கள். நல்ல பன்னீர் வாங்கிச் சலவைத் துணியால் வடிகட்டி ஒரு சிறு கண்ணாடிக் குப்பியில் வைத்துக்கொண்டு பகலில் மூன்று பொழுதும், இரவில் ஒருபொழுதும் இரண்டு மூன்று நாட்கள் இரு கண்களிலும் விட்டு வருவீர்களாயிற் கண்ணோய் நீங்கிவிடும். ஈரான் வாதுமைக் கொட்டையின் பருப்பை அரைத்துப் பாலில் கலக்கிக் காய்ச்சி வெறும் வயிற்றில் காலை மாலை உட்கொண்டு வருவீர்களாயின் வாய்ப்புண், கண்ணோய், நீங்கிவிடும். Laxill Pill உட்கொண்டாயினும் Enema வைத்தாயினும் மலக் குடலைத் துப்புரவு செய்யுங்கள். காரமான உணவை நீக்கி, ஆவின் பால் கலந்த சோறு உட்கொள்ளல் நன்று அல்லது எலுமிச்சம் பழச்சாறு சிறிது கலந்து மோர் விட்டுச் சோறு தின்னல் நல்லது.

உங்கள் முழுநலத்தை வேண்டித் திருவருளை வழுத்தும்.

18

நூல்கள்

அன்புமிக்க,

மறைமலையடிகள்

18-1-43

அன்புமிக்க கனகராயர்க்கு,

நீங்கள் உங்கள் அன்னையார் மனைவியுடன் வருவதாகச் சொன்னபடி வருவீர்களென்று இதுகாறும் எதிர் பார்த்தும் வரவில்லை.

கழகத்தில் “தொண்டைமண்டல சதகம், ல

“பாண்டி

மண்டல சதகம்”, கம்பர் பாடிய “சடகோபரந்தாதி,” “கம்பர் ஏர் எழுபது”,“திருக்கை வழக்கம்”, “சங்கர சோழன் உலா”,“விக்கிரம சோழன் உலா லா", "குலோத்துங்க சோழன் உலா”, “இராசராச சோழன் உலா", "தக்கயாகப் பரணி”, “குலோத்துங்கன் கோவை”, "இராமாநுச நூற்றந்தாதி”, ராமநுஜாய திவ்ய சரிதை குருபரம்பரை என்னும் நூல்களை வாங்கி வாருங்கள், ஆராய்ச்சிக்கு வேண்டுவனவற்றை எடுத்துக் கொள்வேன்.

66

அன்புமிக்க, மறைமலையடிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/337&oldid=1582654" இலிருந்து மீள்விக்கப்பட்டது