உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் கடிதங்கள்

19

முந்நூறு ரூபாய்

309

அன்புள்ள....

பிறரை ஏமாற்றாமலும், பெரிய புரட்டு களவு இல்லாமலும் ஆண்டவனைப் பற்றியே நெஞ்சுருகப் பேசிக் கல்லில் நார் உரிப்பதுபோல் வருந்தித் தேடிய முந்நூறு ரூபாவும் இழந்ததில் மனக்கொதிப்பு இன்னுந் தீரவில்லை. மனமாரக் கொடுத்து விட்டால் வருத்தம் இராது. இத்தொகையைக் கைப்பற்று பவர்க்குத் தீராக் கொடுநோயும், பெரும்பொருட் கேடும் வரும் என்பது திண்ணமாயினும், எமக்கும் எமது சிவத் தொண்டுக்கும் அது பயன்படாமல் போயிற்றே என்றுதான் மனம் நோகின்றது! அத் தொகையுடனிருந்த காசுத் தாள்களெல்லாம் வைத்தபடியே ருக்க அத்தொகை மட்டும் மறைந்து போனதுதான் மாயமாய் இருக்கின்றது! சிவமே அடைக்கலம்.

நீங்கள் எழுதிய கடிதம் எனக்கு ஆறுதல் தந்தது. எல்லாம் வல்ல இறைவனது விளையாடல் அறிவுக்கு எட்டாததா யிருக்கின்றது.

அன்புள்ள,

மறைமலையடிகள்

20. பொங்கல் வாழ்த்து

அன்புள்ள....,

-

நீங்களெல்லீரும் பொங்கல் திருநாளைச் செவ்வனே கொண்டாடியிருப்பீர்களென்று நம்புகின்றோம்.நீங்களெல்லீருங் கல்வியிலுஞ் செல்வத்திலும் உடல் நல மன நலங்களிலுஞ் சிவபெருமான் திருவருளாற் சிறந்து நீடினிது வாழ்க!

அன்புள்ள...

பாங்கற் புதுநாளை

புதுநாளை நீங்கள் நேற்று செவ்வனே கொண்டாடியிருப்பீர்களென்று நம்புகின்றேன். இவ்வாண்டிற் போலவே இனிவரும் ஆண்டுகளிலும் நீங்களும் நுங்கள் மனைவியர் மைந்தர்கள் மருமக்கள்மார் உறவினர், உங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/338&oldid=1582655" இலிருந்து மீள்விக்கப்பட்டது