உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310

மறைமலையம் -14

தோழர்...அவர் தம் மனைவியார் புதல்வர்கள் முதலான அனைவரும் நம்முடைய தமிழ்த் தொண்டுக்கு உறுபெருந் துணையாய்க் கல்வியிலும் செல்வத்திலும் தழைத்து நீடு இனிது வாழ்கவென்று அம்பலவாணர் அம்மை திருவடிகளை இறைஞ்சி வேண்டுகின்றேன்.

அன்புள்ள, மறைமலையடிகள்

21 தமிழ்த்தொண்டு

14-9-42

அன்புள்ள துரைசாமிக்கு,

காசையே பெரிதாக எண்ணி வயிறு கழுவி மாண்டு போகும் ஆட்களில் யான் சேர்ந்தவன் அல்லன் என்பதை அவர் நன்கு அறிவார்.

இப்படித்தானா எம்முடைய தமிழ்த்தொண்டு சிவத் தொண்டுக்கு அவர் உதவி செய்வது? பொருளையே கருதாது சிவத்தொண்டையே கருதி மூன்று இலட்சம் ரூபா வரையில் அதற்காகச் செலவு செய்து, நூல்களை இனிப்பதிப்பிடுவதற்குப் பொருள் இன்றி இடர்பட்டுக்கொண்டிருக்கும் முதுமைக் காலத்தில் எனக்குத் திருத்தமான வகையில் உதவி செய்யாமல் செலவும் மிகுதியாய் வைத்து வருத்துதல் நன்றாகுமா என்பதை அவர் நன்கு நினைத்துப் பார்த்தல் வேண்டும்.

"பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவங்களே” காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்ற பட்டினத்தடிகள் திருமொழியை நினைவிற் பதித்தல் வேண்டும்.

அன்புமிக்க,

மறைமலையடிகள்

22 யோக நித்திரை

-

அன்புள்ள கனகராயர்க்கு,

...நலமாகுக, நேற்று முந்தி உங்கட்கு உடம்பு நலமில்லை கேட்டது முதல் உளம் மிக வருந்தி அன்றிரவு முழுதும்

யென்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/339&oldid=1582657" இலிருந்து மீள்விக்கப்பட்டது