உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் கடிதங்கள்

311

றக்கத்திலேயும் நம் அம்மையப்பரை வேண்டியபடியாய் இருந்தேன். அதன் பயனாக மறுநாளே உங்கட்கு உடம்பு நலம் அடைந்ததென்பது தெரித்து மகிழ்ந்தேன். இரண்டு திங்கள் நல்ல மருந்து உட்கொண்டு அந்நோயை வேரறத் தொலைத்து விடுங்கள். உங்கள் உடம்பின் நலத்தைச் செவ்வையாய்ப் பாருங்கள்.

எவ்வளவோ இடர்பட்டு இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்து நாற்பது நூல்கள் எழுதியும், இவ்விந்திய நாடு இலங்கை எங்குந் தனியனாய்ச் சென்று ஆயிரக்கணக்கான சொற் பொழிவுகள் ஆற்றியும் 50 ஆண்டுகளுக்கு மேலாக யான் செய்த தாண்டினால் நம்மக்கள் எவ்வளவோ நல்லுணர்ச்சியுஞ் சீர்திருத்தமும் பெற்று வருகிறார்கள். இன்னும் யான் செய்த தொண்டுக்கு உதவியாக நீங்களும், நம் இனிய அன்பர் திரு. செங்கல்வராயரும், அவர்தம் அருமைப் புதல்வர்களும் நம் நூல்களை அச்சிட்டுப் பரப்புவார்களாயின் புகழ் புண்ணியமும் பொருள் வருவாயும் பெருகும்.

யானோ கல்வியிலுங் கடவுள் வழிபாட்டிலுந் தமிழ்த் தொண்டு செய்வதிலுங் காலத்தைக் கழித்து வருபவன் என்பதும், என் பிள்ளைகளுக்கும், என் மனைவிக்கும் யான் செய்ய வேண்டிய மைகளைச் செய்து வந்திருக்கிறேன் என்பதும் நீங்கள் எல்லாம் நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்.

கட

யான் எல்லார்க்கும் எக்காலத்தும் பொதுவாக நடப்பவன் என்பதை உங்களையொத்த நண்பர் சிலராயினும் அறிவர். இறைவனுக்கும் அது தெரியும்.

அவன் இறந்துபோகுந் தறுவாயாக அந்நோய் முற்றிய போது ஆறு திங்கள் வரையான் யோக நித்திரையென்னும் அறிதுயிலிற்போகச் செய்து அந்நோயை முற்றும் ஒழித்தேன்.

இம் முதுமைக் காலத்தில் என்னால் எவ்வளவுதான் செய்யு முடியும்? முயற்சி யில்லாமலே பொருள் வந்து விடுமா? தமிழுக்காக ஏராளமான பொருளைச் செலவு செய்துவிட்டேன்.

வேறெவராலும் செய்தல் இயலாத அரும்பெருந் தமிழ்த் தொண்டை நாம் செய்யும்படி இறைவன் நமக்கு அளித்திருக் கின்றனனன்றோ? உலகம் உள்ளளவும் நமது தமிழ்த் தொண்டு நிலைபெற்றுப் பெரும் பயனும் பெரும் புகழும் விளைக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/340&oldid=1582659" இலிருந்து மீள்விக்கப்பட்டது