உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312

மறைமலையம் -14

நிலைக் கடிகாரத்தில் மணிமுள் நிமிஷ முள்ளை அழுத்தும் பித்தளைச் சிறுகுமிழ் முறிந்து போனதற்கு, வேறு நல்லதொன்று பொருத்தவில்லை. மணிமுள்ளுங் கழன்று கீழே தொங்குகின்றது. அதனை இறுகப் பொருத்த வேண்டும்.

பெரிய கடிகாரம் மறுபடியும் நின்று போயது. ஆதலால், அதனைக் கழற்றிக் களிம்புந் துருவும் போகச் செவ்வையாய்த் துடைத்து அதனை இயக்குதற்குத் திறமான ஒருவரை உடனே அழைத்து வாருங்கள். மணிக் கட்டுக் கைக்கடிகாரமுங் கொண்டு வாருங்கள்.

நமது தொண்டு தொடர்பாகச் செவ்வனே நடந்து நம் மக்கட்குப் பயன்படும்படி செய்வதே நம்மெல்லார்க்கும் புகழ் புண்ணியம். தனியனாய் உழைத்து வருவதுடன் தொல்லை தரும் எல்லாச் செலவும் யான் ஒருவனே செய்துவரும் இடர்ப்பாடும் நீங்கள் எண்ணிப் பார்த்தல் வேண்டும்.

நலம்.

இருவரும் அன்புகூர்ந்து வெள்ளிக்கிழமை இங்கு வரின்

23

பிறப்பு

அன்புமிக்க,

மறைமலையடிகள்

அன்புள்ள...

அம்பலவாணர் திருவருளாலும் உங்கள் நல்லெண்ணத் தாலும் என் மனைவி பொன்னாள் மருத்துவ விடுதியில் ஓராண் என்ம மகவீன்று குழந்தையுடன் நலமாக இருப்பதறிந்தும், நீங்கள் அவளை ஒவ்வொரு நாளும் போய்ப் பார்த்து வருவதறிந்தும் மிக மகிழ்வெய்தினேன். உங்கள் உண்மையன்பிற்கும் உற்ற நேரத்திற் செய்யும் பேருதவிக்கும் அம்பலவாணர் உங்கட்கு எல்லா நலங்களும் அருள்வார் என்பது திண்ணம்.

உங்கள் மருமகள் ஒரு பெண் மகவு ஈன்று குழந்தையுடன் நலமா யிருத்தலறிந்து எல்லேமும் மிக மகிழ்ந்தோம். பெண் மகவு இல்லையே யென்ற குறை இப்போது நீங்கியது. குழந்தையும் பெற்றோர்களும் எல்லா நலனுடனும் வாழும்படி அவன் திருவருளை வேண்டுகின்றோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/341&oldid=1582661" இலிருந்து மீள்விக்கப்பட்டது