உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் கடிதங்கள்

313

உங்களை நேரிற் பார்த்து நீண்ட நாளானமையால், உங்களைப் பார்க்க மனம் மிக அவாவுகின்றது. விரைவில் வாருங்கள். திருக்குறளுக்குப் புத்துரை ஒன்று எழுதி வருகின்றேன்.

அன்புள்ள,

24

மறைமலையடிகள்

-

பூவும் - மணமும் போல்

24-2-44

பல்லாவரம்,

அன்புமிக்க... திருவருளால் எல்லா நலங்களும் உண்டாகுக!

6

நீ எழுதிய கடிதம் வந்தது.. 15 நாட்களுக்கு மேலாக உணவின்றி அம்மை நோயினால் மிக வருந்திப் பின் சிவபிரான் திருவருளால் இப்போதுதான் நலமெய்தி வருகின்றேன். நின் திருமணம் நடந்தபோது நான் மிக வருந்திக் கிடந்தமையால் அதற்கு நான்வர இயலவில்லை. ஆனாலும் நம் குடும்ப நேயரான அன்பர் திரு. கனகராயரையும் அவர் தம் மனைவியாரையும் நின் திருமணத்திற்குச் சென்று அங்கு அதனை நடத்தி வைக்கும்படி அனுப்பி வைத்தேன். அவர்களும் நம் அன்பிற்கிசைந்து நின் திருமணத்திற்கு வந்து நன்கு நடத்தி வைத்து எனக்கும் தெரிவித்தார்கள். அது கேட்டு மிக மகிழ்ந்தேன். எங்ஙன மாயினும், நீயும் நின் மனைவியும் பூவும் மணமும்போல், தேனும் பாலும்போல், அன்புடன் வாழ்ந்து, தமிழ்த் தொண்டு சிவத் தொண்டுகளைச் செவ்வனே நீண்டகாலம் நடத்திக்கொண்டு ருக்கும்படி சிவபெருமான் திருவடிகளை வேண்டுகிறோம். நின்மாமன்மாரும், நின் சிற்றன்னையும் நுங்களை விருந்தோம் பினமைக்கும் நின் மாமன்மார் நின் திருமணத்திற்கு வேண்டும் உதவிகளைச் செய்து செவ்வனே நடத்தி வைத்தமைக்கும், மிக மகிழ்கின்றேன். எனக்கு உடம்பு இன்னும் செவ்வையாய் நலமெய்திய பிறகு நின்னையும் உன் மனைவியையும் இங்கு வருவிக்கக் கருதி யிருக்கின்றோம். சிவபெருமான் அருள் செய்யவேண்டும். நின்மனைவிக்கு என் வாழ்த்துரையினைத் தெரிவி. நின் மனைவி இருக்கும் இடத்திலேயே நீயும் வேலை பார்க்கும்படி முயற்சி செய். நலம்.

அன்புள்ள மறைமலையடிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/342&oldid=1582663" இலிருந்து மீள்விக்கப்பட்டது