உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314

❖LDMMLDMOшILD -14❖

25 - உண்மை அன்பு

நீங்கள் நேற்றெழுதிய கடிதம் வந்தது. குழந்தை கண்ணப்பன் நோயாயிருப்பதறிந்து வருந்தினோம். கூடுமானால் நீரேற்றி (enama) நாடோறும் வைத்து மலக் குடலைத் துப்புரவு செய்யுங்கள். அல்லது நாடோறும் இரவில் இழிவு மாத்திரை (Laxill pills) ஒவ்வொன்று அவனுக்குக் கொடுத்து வாருங்கள். பார்லி மாவை ஆவின் பாலிற் சேர்த்து நீர்க்கக் காய்ச்சின கஞ்சியைத் தவிர வேறொன்றும் வயிற்றுக்குக் கொடுக்க வேண்டாம். காலை மாலை துணிகளைக் களைந்து தோய்த் துலர்த்த துணிகளையே யுடுக்கக் கொடுக்க வேண்டும். படுக்கையும் வீடுந்துப்புரவாய் இருக்க வேண்டும். வேப்பிலையும் மஞ்சளும் சேர்த்து அரைத்த நீரை வீடெங்கும் இரண்டு வேளையுந் தெளித்து சாம்பிராணிப் புகையுங் காட்டுக. அம்பலவாணர் திருவருளால் பையன் விரைவில் நோய் நீங்கி நலம் பெறுவான்.

L

உங்கள் உண்மை யன்பிற்கும் உற்ற நேரத்திற் செய்யும் பேருதவிக்கும் அம்பலவாணர் உங்கட்கு எல்லா நலங்களும் அருள்வார் என்பது திண்ணம்.

மறைமலையடிகள்

26 - திருவாசக விரிவுரை

15-7-22

அன்பும் அருந் தகைமையும் வாய்ந்த சைவத் திருவாளருக்கு அன்புடன் எழுதுவன:

தாங்கள் அன்புடன் கூர்ந்தெழுதிய கடிதங்கள் எல்லாம் வந்தன. தங்கள்...எடுக்கப்பட்ட குற்ற வழக்குத் தீதின்றி முடிந்தமை தெரிந்து மகிழ்ந்தேன். மனமொழி மெய்களால் யான் இதுகாறும் எவர்க்கும் தீது செய்ததின்மையினாலும், பிறர் செய்த தீமை களையும் விரைவில் மறந்து விடுதலே எனது இயற்கையா யிருத்தலினாலும் அவர் செய்தவைகளையுஞ் சொன்னவைகளை யும் மறந்தே போனேன். பிறர் அவற்றை நினைவூட்டினால் மட்டும் அவை நினைவுக்கு வந்து வருத்தந் தருகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/343&oldid=1582664" இலிருந்து மீள்விக்கப்பட்டது