உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் கடிதங்கள்

315

திருவாசக உரை எழுதுவதில் எனக்குண்டான உழைப்பை இங்கு எழுதல் இயலாது; எல்லாம் வல்ல சிவமே அதனை யறியும். மாணிக்கவாசக சுவாமிகளுக்கும், சைவத்திற்கும், தமிழுக்கும் யான் செய்யக் கருதிய திருத்தொண்டை இத்திருவாசக விரிவுரை வாயிலாகச் செய்யத் தீர்மானித்தே, இதனை ஆராய்ச்சிகளால் விரித்தெழுதப் புகுந்தேன்.

அன்புள்ள,

மறைமலையடிகள்

27 - வெளிப்பாளையம் விழா

பல்லாவரம், 28-9-1943

அன்புருவாகிய செல்வத் திருமகன் கோவிந்தராசு பிள்ளை அவர்கட்குச் சிவபிரான் திருவருளால் எல்லா நலன்களும் மேன்மேற் பெருகுக.

உங்கள்பால் விடைபெற்றுக் காரைக்காலுக்குச் சென்று, காரைக்கால் அம்மையாரையும் திருத்தக்கலூர், திருநள்ளாறு, திருக்கடவூர் முதலான திருக்கோயில்களையும் வணங்கிக் காண்டு நேற்று மாலையில் நலமுடன் இங்கு வந்து சேர்ந்தோம்.

உங்கள் அன்பினாலும் அரும்பெரும் முயற்சியினாலும் நமது நாகை வெளிப்பாளையம் சைவசித்தாந்த சபையின் 55-வது ஆண்டு நிறைவு விழாப் பேரவை எனது தலைமையில் மிகச் செவ்வையாகவும், நம் தமிழ் மக்களுக்குப் பயன்படும்படியாகவும் நிறைவேறும்படி அருள் புரிந்த நம் சிவபிரான் திருவடிகட்கு நம் புல்லிய வணக்கம் உரியதாகுக. இனி உங்களாலும், உங்களோடு ஒத்துழைக்கும் அன்பர்களின் முயற்சியாலும் நமது அவை செவ்வையாக நடைபெறுமென்று நம்புகிறேன்.

அப்பக்கங்களில் நம்முடைய நூல்கள் மிகப் பரவி நம் தமிழ் மக்களுக்குப் பெரிதும் நன்மை தரும்படி தாங்கள் முயற்சி செய்யவேண்டும். நம் நூல்கள் வேண்டியவர்களின் முகவரியை நம் அன்பர் திரு. அ. கனகராயர் அவர்களுக்குத் தெரிவிப்பீர் களானால், அவர் அவர்களுக்கு அந்நூல்களை வி.பி.பி. வாயிலாக அனுப்புவர். அல்லது

வேண்டிய நூல்களை நீங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/344&oldid=1582665" இலிருந்து மீள்விக்கப்பட்டது