உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316

மறைமலையம் -14

மொத்தமாகத் தெரிவித்தால் அவைகளை ரயில்வே பார்சலில் அனுப்பிப் பார்சல் ரசீதை வி.பி.பி. வாயிலாக அனுப்பி வைப்பார்.

சிக்கல் திருக்கோயில் விழாச் சபைக்கு யாம் வரும்படி நேருமானால் உங்களுக்குத் தெரிவிப்பேன்.

உங்கள் நலத்தையும், உங்கள் வீட்டாரெல்லார் நலத்தையும் கோரிச் சிவபிரான் திருவருளை வழுத்தும்.

அன்புள்ள,

மறைமலையடிகள்

28 - நீலா

....

அன்பும் அருமையும் மிக்க திருவாளர் பிள்ளையவர் கட்குச் சிவபெருமான் திருவருளால் எல்லா நலங்களும் உண்டாகுக.

குழந்தை நீலனைத் தங்கள் அன்பிற் சிறந்த மனைவி யாரவர்கள் நாலைந்து நாட்களுக்கு முன் சென்று பார்த்தார் களாம். இந்தச் சனிக்கிழமையன்று நீலா விரிவுரை நிகழ்த்த ஏற்பாடாகி யிருத்தலால் அதற்கு அம்மையவர்கள் வருவதாகவும் கடிதம் வந்தது. நீலாவின் அன்னையும் அன்றைக்குத் திருவல்லிக்கேணிக்கும் போக வேண்டியிருத்தலால் அவள் சனிக்கிழமை காலையில் தங்கள் இல்லத்திற்கு வந்து அம்மை யவர்களையும் அழைத்துக்கொண்டு திருவல்லிக்கேணிக்குப் போவாள். சனிக்கிழமை காலை பதினோரு மணிக்குள் என் மனைவி தங்கள் இல்லத்திற்கு வரக்கூடும். அதற்குள் அம்மையவர்களும் புறப்படுவதற்கு ஏற்பாடாகி யிருந்தால் நலமாயிருக்கும். அடுத்த வாரத்தில் . யானும் ஒருகால் தங்களில்லத்திற்கு வருவேன். தங்கள் இருவரின் அன்பு மிகுதிக்குப் பெரிதுங் கடமைப்பட்டிருக்கின்றோம். தாங்களும் அம்மையவர்களும் பிள்ளையவர்களும் நலமுடனிருக்கும்படி திருவருளை வழுத்துகிறேன்.

அன்புள்ள,

மறைமலையடிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/345&oldid=1582666" இலிருந்து மீள்விக்கப்பட்டது