உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் கடிதங்கள் 29 - நன்கொடை

317

5-3-1937

அன்பர்காள்,

1931 ஆம் ஆண்டு, தைத் திங்களில் ஐந்துநாள் நடைபெற்ற தமது பொதுநிலைக் கழக 20- ஆம் ஆண்டு விழாவின் சிறப்புக்களைத் தாங்கள் முன்னமே அறிந்திருக்கலாம். இது கொண்டு வருபவர் தங்களுக்குத் தரும் அதன் வரலாற்றினாலும் அவற்றைத் தாங்கள் நன்கறியலாம். இத் தென்றமிழ் நாட்டின் பல ஊர்களிலிருந்தும், இலங்கை, பர்மா, மலாய் நாடு முதலான தாலைவான இடங்களிலிருந்தும் வந்து அவ் விழாவின் சிறப்புகளை நேரே கண்டும், கல்வி அறிவு ஆராய்ச்சியில் மிக்க புலவர்கள் அப்போது நிகழ்த்திய விரிவுரைகளைக் கேட்டும் இன்புற்ற பெருந்திரளான அன்பர்களில் பலர் அத்தகைய விழாவினை ஆண்டுதோறும் நடத்துமாறு வேண்டிக் கேட்கின்றனர். முன் நடத்திய விழாவுக்கே ரூ.2000 செலவானமையாலும், அதன் பொருட்டுமிக்க முயற்சியும் உழைப்பும் எமக்கும் எம்மவர்க்கும் நேர்ந்தமையாலும் இங்கே யாம் நூலாராய்தல், நூல் எழுதல், எழுதிய நூல்களை அச்சிட்டு வெளியிடுதல், வெளியூர் அவைகளின் ஆண்டு விழாக்களை அடுத்தடுத்துச் சென்று நடத்தல் முதலான முயற்சிகளை இடையறாது செய்து வருதலாலுஞ் சென்ற 5 ஆண்டுகளாக, அவர்கள் வேண்டியபடி எமது பொதுநிலைக் கழக ஆண்டு விழாவினை இங்கே நடத்தக் கூடவில்லை.

ஈகையும் அறமும் இன்றிப் பெரும்பொருள் தொகுப்பதும், தொகுத்த பொருள்கொண்டு நாடகக் காட்சிகள் காண்பதும், அங்ஙனமே மற்றை உலகியல் இன்பங்களை நுகர்வதுமே இம் மக்கட்பிறவி எடுத்ததன் நோக்கம் ஆகா. ஏனென்றால், அவையெல்லாம் நிலையான அறிவையும் நிலையான இன்பத்தையும் தரமாட்டா. அவை திடீரென அழிந்து போவனவும் ஆகும். ஆதலால் அடுத்தடுத்து நுகரும் நிலையில்லா இவ்வுலக இன்பங்களின் இடையிடையே சிறிது சிறிதாவது நாம் பேரின்ப நிலைகளைப்பற்றி அறிவின்மிக்கார் எழுதுபவை களையும் பேசுபவைகளையுங் கற்றுங் கேட்டும் மெய்யறிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/346&oldid=1582667" இலிருந்து மீள்விக்கப்பட்டது