உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318

❖LDMMLDMOшLD -14 மறைமலையம்

பெற்று மகிழல் வேண்டும். அதன் பொருட்டாகவே எமது கழக 26-ஆம் ஆண்டு நிறைவு விழாவினை இவ்வாண்டின் டிசம்பரில் 24, 25, 26, 27, 28- இல் ஐந்து நாட்கள் நடத்தத் திருவருளை முன்னிட்டு முயற்சி செய்கின்றோம்.

மேலும், யாம் செந்தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி இதுகாறும் வெளியிட்டிருக்கும் 40 நூல்களையும் இவ்வுலகம் எங்கணும் உள்ள அன்பர்கள் கற்றுப் பெரும் பயன் அடைந்து வருகிறார்களென்பது அவர்கள் மகிழ்ந்து எழுதுங் கடிதங்களால் இனிது விளங்குகின்றது. இத்தகைய நூல்களை எமது காலத்திலும் எமக்குப் பிற்காலத்திலுந் தொடர்பாக வெளியிட்டு உலகிற்குப் பெருநலம் புரிய ஒரு பெருந்தொகை வைப்பும் ஏற்படுத்த வேண்டியிருக்கின்றது.

பயன்றராத, நிலையில்லாத, தீயவழிகளிற் பெரும் பொருள் செலவிடுவதை மக்கள் பெரிதாக நினைப்பதில்லை; பெரும் பயன்றரும் நிலையான நல்ல கல்வி விளக்கத்திற்குச் சிறு பொருள் தருவதையோ பெரிதாக நினைக்கிறார்கள்!

ஆனால்,எம்முடைய தமிழ்த்தொண்டு சிவத்தொண்டுகளின் பெரும்பயனை அறியத்தக்க தாங்கள், எமது பொதுநிலைக் கழக 26-ஆம் ஆண்டு நிறைவு விழாச் செலவுக்கும், எமது நூல் வெளியீட்டு வைப்புக்கும் பயன்படும்படி இதுகொண்டு வருபவரிடத்துத் தக்க தொகை நன்கொடையாக உதவி, எமது கையெழுத்திட்ட பற்றுச் சீட்டுப் பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

கழக விழாவுக்குந் தாங்கள் வந்திருந்து அதன் சிறப்புகளையும் விரிவுரைகளையுங் கண்டுங் கேட்டும் மகிழ்ந்து புண்ணியங்களிற் சிறந்து நீடினிது வாழ்வீர்களாக வென்று வல்ல அம்பலவாணர் திருவருளை வேண்டி

எல்லாம்

வழுத்துகின்றோம்.

பொதுநிலைக் கழக நிலையம் பல்லாவரம்,

பொதுநிலைக்கழக ஆசிரியர்

அன்புள்ள மறைமலையடிகள்

மறைமலையடிகள்: சுவாமி வேதாசலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/347&oldid=1582668" இலிருந்து மீள்விக்கப்பட்டது