உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

கடிதம் - 1

அன்புள்ள நேசரே, நேற்றிரவு எங்கள்வீட்டு மெத்தைமேல் நான் என் தங்கையோடும் உலாவிக்கொண்டிருக்கையில் நீர் வீசி எறிந்த ஏதோ கடிதாசிமடிப்புஒன்று என் எதிரே வந்து விழுந்தது. அதனை நீர் எறிந்ததை என் தங்கை பார்க்கவில்லை. அவள் வானத்திலே சந்திரனைச்சூழவிளங்கிய வட்டத்தை உற்று நோக்கிய படியே 'இதோபார் அம்புலி கோட்டை கட்டி யிருக்கின்றது!' என்று என்னைக்கூப்பிட்டுக் க் காட்டிக் காண்டிருந்தாள். அந்தக் கடிதாசி மடிப்பு எதிரேவந்துவிழவே, நான் அதனை எடுக்கக்கீழே குனிந்தேன். என் தங்கையும் என்னைக்கவனித்தாள். என் உடலம் பதறியது, வாயோ குழறியது.

என்னை அறியாமலே என் உள்ளத்தில் ஒரு நடுக்கம்

உண்டாயிற்று. கடிதாசியைக் கையில்எடுத்ததும் என் தங்கை என்னைப்பார்த்து “அக்கா, அதென்ன கடிதாசி? ஏன் என்னமோ ஒருமாதிரியாய்ப் பேசுகிறாய்?” என்று கேட்டாள். அதற்கு நான் "வேறொன்றும் இல்லை! ஏதோகடிதாசி கீழேகிடந்ததை எடுத்தேன். உள்ளே வா, நம் அறையிற்போய் விளக்கேற்றிப் பார்க்கலாம்" என்று மெத்தைமேல் உள்ள என் அறைக்கு அவளை அழைத்துப்போனேன். அறைக்குட்போனதும் நல்ல காலமாக நெருப்புப்பெட்டி அகப்படவில்லை. கீழே இறங்கிப் போய் அதனை எடுத்துவரும் படி அவளை அனுப்பிவிட்டு, அவள் திரும்பி வருவதற்குள் உமது கடிதத்தை மறைவான ஓரிடத்தில் ஒளித்து வைத்து என் தம்பிமார் படிக்கும் பாடப் புத்தகங்கள், சன்னலின் உள் திண்ணைமேல் இருப்பதை நிலா வெளிச்சத்தால் பார்த்து அவற்றைத் தடவினேன்; மேலிருந்த புத்தகத்தில் கிழிந்த ஓர் ஏடானது என்கைக்கு வந்தது. உடனே அதனை எடுத்து மடித்து என்கைக்குள் வைத்துக்கொண்டு சிறிது மன ஆறுதலோடு நின்றேன். இதற்குள் என்தங்கை ஒரு மெழுகுவர்த்தி விளக்கையே கையில் எடுத்து வந்தாள். என் தங்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/46&oldid=1582004" இலிருந்து மீள்விக்கப்பட்டது