உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

மறைமலையம் -14

மிகவுங்கூர்மையான அறிவுள்ளவள் என்பது உமக்கேதெரியும். அவளுக்கு இப்போது வயது எட்டுத் தான் ஆகிறது; ஆயினும் அவள் அறிவைப்பார்த்தால் அவள் முப்பதுவயதுடையவள் போல் தோன்றுகிறாள். ஒருவருடைய முகச்சாயலைப் பார்த்து அவருடைய குணங்களைத் தெரிந்து கொள்ளுகின்றாள். UTL ங்களையும் வெகுதீவிரமாயப் படித்து விடுகின்றாள். இப்போது தமிழ் நான்றாய் எழுதவும் படிக்கவுங் கற்றுக் கொண்டாள். இங்கிலீஷில் நன்றாய் எழுத்துக் கூட்டுகின்றாள், செய்யுட் பாடங்கள் எல்லாம் செவ்வையாக ஒப்பிக்கின்றாள். இவள் விளக்கெடுத்துவந்ததும் இருவரும் மேசையண்டை போனோம்.விளக்கை மேசைமேல் வைத்தாள். நான் நாற்காலியை விளக்கின் கிட்ட இழுத்து அதில் உட்கார்ந்து கொண்டு, அவள் என் முகத்தைப் பாராதபடி கையிலிருந்த கடிதாசியை எடுத்துப் பிரித்தேன்.பக்கத்தில் நின்ற என் தங்கை அதைப்பார்த்ததும் “ஓ, து நம்ம தம்பி பிச்சு பாடப்புத்தகத்தில் கிழிந்த ஏடு அல்லவோ? இதையா நீ எடுத்தாய்?" என்று என்னைச் சந்தேகத்தோடு பார்த்துக் கேட்டாள்.”ஆம், இதுதான், வேறு என்ன அம்மா?" என்று அமைதியோடு சொன்னேன். அதன் மேல் என்னை ஒன்றுங்கேட்க மனம்இன்றி இருந்துவிட்டாள்.

அப்போது என்மனம் பட்டபாட்டை என்னென்று எடுத்துச் சொல்வேன்! என் தங்கையினிடத்து இதுவரையில் நான் என் மனத்தை இதுபோல் ஒளித்துப் பேசியதில்லை. என் தங்கையை அரை நிமிஷங்கூடப் பிரிந்திருக்க மனம்வராத நான், இப்போது அவளைவிட்டுத் தனியேஇருக்க விரும்பினேன்! அவள் எப்போது என்னைவிட்டு அப்புறம்போவாள் என்று எதிர் பார்த்தேன்! இதற்குள் கீழேயிருந்த எங்கள் தாயார் ஏதோ காரியமாகத் தங்கையைக் கீழேவரும்படி கூப்பிட்டார்கள். அவளும் உடனே கீழேபோனாள். நானும் தலைமேல் ஏறியிருந்த பெருஞ்சுமையை இறக்கி வைத்தவள் போல மனம் ஆறுதல் அடைந்து பெருமூச்சு விட்டேன்.

உமது கடிதத்தைப் படித்துப்பார்க்க என் மனம் துடிதுடித்தது. என் நினைவெல்லாம் உமது கடிதத்தின்மேல் குவிந்து நின்றது. நிலத்தில் புதையலாக வெட்டி எடுத்த, ஒரு செப்புப்பானையை மறைவான ஓர் இடத்தில் கொண்டுபோய் வைத்தவன் அப்பானையின் உள்ளேயிருப்பது இன்னதென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/47&oldid=1582005" இலிருந்து மீள்விக்கப்பட்டது