உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

19

அறிய யாருமில்லாத சமயத்தை நாடுவது போல நானும் உமது கடிதத்தின் உள்ளிருப்பது இன்ன தென்று உணரப் பதைபதைத்தேன். தங்கை அப்புறம் போனதும் நான் படிக்கும் புத்தகங்களில் ஒன்றை எடுத்து அதனுள் உமது கடிதத்தைப் பிரித்து வைத்துப் பார்த்தேன். அதனைப் படிக்கும் போதே என் உடம்பெங்கும் அனன்றது; என் கண்கள் மயங்கின; என் உயிரும் உணர்வும் என் வசப்படாமற் போய்விட்டன.

"கண்மணி, உன் அழகிய உருவமானது என் நினைவிற் குடிகொண்டு விட்டது; உன்னை நினைக்க நினைக்க உன்மேல் எனக்கு அளவிடப்படாத அன்பு ஊறித்ததும்பி வழிகின்றது.என் சல்வியே உன்னை உன்னை இங்ஙனம் அழைப்பது பற்றி என் மேற்கோபம் அடைவாயோ? என்செய்வேன்! என்மேற்குற்றஞ் சொல்வாயோ? நீ என்னை எப்படிச் செய்தாலும் நன்றே. உன்னை இன்றி நான் எப்படி உயிர்வாழ்வேன்!” என்றுநீர் எழுதியசொற்கள் ஒவ்வொன்றும் என்னை அனலிலிட்ட மெழுகைப்போல் ருக்குகின்றன. நான் பருவம் அடையாத சிறுமியாயிருந்த போது எங்கள் வீட்டாரும் உங்கள் வீட்டாரும் ாரும் எவ்வளவோ அன்னியோன்னியமாக இருந்தோம்; நீங்கள் முதலிமார் என்றும் நாங்கள் பார்ப்பார் என்றும் வித்தியாசம் இல்லாமற் பழகினோம். நான் அடிக்கடி உங்கள் வீட்டில் வந்து விளையாடுவதும் நீர் எங்கள் வீட்டில் வந்து விளையாடுவதுமாய் நமது சிறுபருவம் எவ்வளவோ நமது மனத்திற்கு மகிழ்ச்சி தந்தது. அந்தச் சிறுபருவத்தில் உம்மைக் காணும்போதெல்லாம் எனக்கு மிகவும் பிரியமாயிருந்தது; நீரும் என்மேல் அதிகபட்சமாய் இருந்தீர். நாம் இருவரும் இங்ஙனம்; ஒருவர்மேல் ஒருவர் மிகுந்த ஆசையாய் இருப்பதை நம் பெற்றோர்கள் நாளடைவில் கவனித்துவந்தார்கள் என்று பிற்பாடு செவ்வையாகத் தெரிந்து கொண்டேன். னென்றால் நான் பருவம் அடைய ஒருவருஷம் இருக்கும் போதே என் பெற்றோர்கள் என்னை அடுத்தவீட்டுக்குப் போக வேண்டாம் என்றும் இனிமேல் அந்த அடுத்தவீட்டு முதலிப் பையனிடம் போய் விளையாடப் படாது பார்த்துப் பேசவுங் கூட ாது என்றும் தடுத்தார்கள். அது முதல் நான் அவர்கள் சொற்படியே இவ்வீட்டைவிட்டு வெளிப் புறப்படாமல் இருந்தேன்; ஆனால், என்மனம் மாத்திரம் உம்மை விட்டுப் பிரியவில்லை. உம்முடைய பெற்றோர்களும் உம்மை எங்கள் வீட்டுக்கு வரலாகாது என்று கண்டித்தார்களாம். இப்படி நாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/48&oldid=1582006" இலிருந்து மீள்விக்கப்பட்டது