உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

மறைமலையம் -14

இருவரும் காவலில் வைக்கப்பட்டாலும், ஒவ்வொரு சமயம் நாம் மெத்தைமேல் யாருமில்லாத சமயத்தில் கண்டு மகிழ்ந்து வந்தோம். அப்போதெல்லாம் நீர் என்னை உமது தங்கை போலவும், நான் உம்மை எனது தமையன் போலவும் நேசித்து வந்தோம். ஆனால், நாளேற நாளேற நமது நேசம் வேறுவிதமாய் மாறி வரலாயிற்று. உம்மை எப்படிப் பிரிந்திருப்பது, உம்மோடு எந்நேரமும் கூடிவிளையாடக் கிடைக்குமோ என்னும் ஓர் எண்ணம் எனக்குள் வேரூன்றி வரத்தொடங்கியது.நண்பரே, நான் பருவம் அடைந்த இந்த நாலைந்து வருஷமும் உமது உருவத்தை மாத்திரம் அன்று, உம்மையே எந்நேரமும் என்நெஞ்சில் வைத்துப் பார்த்து வருகின்றேன். என் செல்வியே என்று அழைத்தால் என்மேற் கோபிப்பாயோ? என்கின்றீர். ஆம், கோபிப்பேன் தான். என் செல்வியே, என்றால், நீர்வேறு நான்வேறு என்று ஏற்படுகின்ற தன்றோ? ‘என்உயிரே' என்று என்னை அழைப்பீரானால் உம்மேற் சிறிதுங்கோபியேன்.நீருடம்பும் நான் உமது உயிருமாக இருக்கலாம். அப்படியல்லாவிட்டால் நான் உடம்பும் நீர் எனது உயிருமாக இருக்கவேண்டும்.

என் தங்கை விழித்துக்கொண்டாள்.எல்லோரும் அயர்ந்து உறங்கும் நள்ளிரவில் நான் மாத்திரம் விழித்திருந்து நான் படிக்கும் அறையில் இக்கடிதத்தை எழுதினேன்; இதோ அக்கா, அக்கா என்று என்னைக் கூப்பிடுகின்றாள். விடை எழுதும்.

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/49&oldid=1582007" இலிருந்து மீள்விக்கப்பட்டது