உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

கடிதம் - 2

எனதன்பிற்குரிய நண்பரே, -நேற்றுமாலையில் நீர் எறிந்த கடிதத்தை எடுத்துக்கொண்டேன். இனிமேல் நீர் கடிதம் எறிவதாயிருந்தால் நான்மாத்திரம் மெத்தைமேல்வரும் சமயம் பார்த்து அப்படிச்செய்வீர் என்று கேட்டுக்கொள்ளுகின்றேன். முதல் நாள் நீர் எறிந்த கடிதத்தை நான் எடுத்த காலந்தொட்டு என் தங்கை என்னோடு மெத்தைமேல் வந்தால் நாற்புறமும் சுற்றிப்பார்த்த வண்ணமாய் இருக்கிறாள். அவள் மனத்தில் என்ன சந்தேகம் இருக்கிறதோ! ஒருகால் நீர் எறிந்தபோது அதனைச் சாடையாகத் தான் பார்த்தாளோ என்னமோ அறியேன். அவளால் யாது விளையுமோ என்று அஞ்சிவாடுகிறேன். என் கண்ணனையீர், இனி உமது திருமுகமண்டலத்தைக் காணாமல் உயிர் வாழ்வேனோ?

என்தங்கை என்னிடத்தில் அளவிறந்த அன்பும் ஆசையும் வைத்திருக்கின்றாள். மான்கன்றுபோல என்னைச் சுற்றிச்சுற்றித் திரிகின்றாள். அவளுடைய சாந்தகுணமும் கூரிய அறிவும் என் நினைவைவிட்டு என்றும் அகல்வதில்லை. என்காலிற்பட்டதைத் தன் கண்ணிற்பட்டதுபோல் எண்ணி நெஞ்சம்உருகுகிறாள். சில சமயங்களில் நான் அவளை வெடுவெடுப்போடு பேசினால், அவள் அல்லிமலர்போல் முகம்வாடியிருப்பாள். அதுகண்டு மனம் வருந்திக் “குழந்தாய், கிடக்கிறதுவா” என்றால் ஓடி வந்து என்னைக் கட்டிக்கொண்டு முத்தம்இடுவாள். எங்கள் குடும்பத்தில் என்னோடு பிறந்தவர்களில் இந்த அருமைத் தங்கையிடத்தில் எனக்குள்ள ஆசை பிறரிடத்தில் இல்லை. இவளும் என்மேல்வைத்த பிரியத்தால் நான் ஒவ்வொருகால் மாற்றப்பிள்ளைகளோடு ஆசையோடு விளையாடினால், என்னைப்பார்த்து “அக்கா, உனக்கு என்மேல் ஆசையோ, தம்பிமாரிடத்து ஆசையோ?" என்று மோவாயை நிமிர்த்திக்கேட்பாள். அதற்கு நான் “அம்மா, உன்னிடத்தில் தான்

என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/50&oldid=1582008" இலிருந்து மீள்விக்கப்பட்டது