உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

மறைமலையம் -14

எனக்கு ஆசை” என்று சொன்னால்தான் விடுவாள். உண்ணும் போதும் உறங்கும் போதும் என் பக்கத்தை விட்டு அகலாள். நேற்றிரவு நாங்கள் சாப்பிட்டபிறகு நானும் என் தங்கையும் முற்றத்து நிலாவிலே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.

று

அப்போது அவள், “அக்கா, அடுத்த தைமாதம் எனக்குக் கல்யாணம் ஆகப்போகிறதென்று அம்மாவும் அப்பாவும் பேசிக் கொண்டார்கள். நம்ம அண்ணா சுப்பிரமணியனுக்குப் போன வைகாசிமாதம் கல்யாணம் நடந்ததே; அப்படித்தானே எனக்கும் நடக்கும்? எனக்கு உயர்ந்த பட்டுச்சீலைக்கட்டிப் பளப்பளப்பான நகைகள் போட்டுப், பூச்சூடிக் கொட்டி முழக்கி என்னை எல்லாரும் கொஞ்சுவார்கள் அல்லவா? நம்ம அண்ணா பக்கத்திலே ஒரு சிறு பெண்ணை எவ்வளவு அலங்காரம் பண்ணி எல்லாருங் கொண்டு போய் உட்கார வைத்தார்கள்! என்னை யார் பக்கத்திலே உட்கார வைப்பார்கள்?” என்று கேட்டாள்.

66

66

“அம்மா, உனக்கு எல்லா அலங்காரமும் பண்ணி மிகுந்த சிறப்போடுதான் கல்யாணம் நடத்துவார்கள்” என்று சொல்லி, ‘ஆனால், உனக்கு மணமகன் இன்னார் என்பது எனக்குத் தெரியாது. நல்லது, உனக்கு எப்படிப்பட்டவன் மணமகனாய் வந்தால் பிரியமாயிருக்கும்?” என்று அவளைக்கேட்டேன்.

“அக்கா, நம்ம சுப்பிரமணியனும் அந்தச் சிறுபெண்ணும் கலியாண மனையில் உட்கார்ந்திருந்தபோது இரண்டுபேரையும் பார்க்கப் பார்க்க எனக்கு ஆசையாயிருந்தது.சுப்பிரமணியன் எவ்வளவு அழகாயிருக்கிறான்! அந்தப்பெண்ணும் எவ்வளவு அழகாய் இருக்கிறாள்! பார், ஆனால் நம்ம சுப்பிரமணியனைவிட அடுத்த வீட்டிலிருக்கிற தெய்வநாயகம் எவ்வளவு அழகாயிருக் கிறான்! அதென்ன அக்கா தெய்வநாயகத்தையும் உன்னையும் பார்த்தால் ஒரேமாதிரியாய் இருக்கிறதே?” என்று சொல் லுகையில் சட்டென்று பயந்தவளாய் அதனை நிறுத்தி அக்கா, அம்மா கேட்டுக்கொண்டு வந்திடப்போகிறாள்? நான் பேசிவிட்டேன்” என்று மிரண்டு

அசாக்கிரதையாய்ப்

சொன்னான்.

உடனே “என் அம்மா, இப்படிப் பயப்படுகிறாய்?” என்று

கேட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/51&oldid=1582009" இலிருந்து மீள்விக்கப்பட்டது