உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

கோகிலாம்பாள் கடிதங்கள்

23

நம்ம

'முன்னொருதரம், அம்மாகிட்டப்போய் அக்காளையும் அடுத்த வீட்டுத் தெய்வநாயத்தையும் பார்த்தால் ஒரேமாதிரியாய் இருக்கிறதே, அதேன் அம்மா?" என்று இப்படியே கேட்டேன். அதற்கு அம்மா கோபித்துக்கொண்டு என்னை அகப்பைக்காம்பால் அடித்து, 'இனிமேல் அடுத்தவீட்டு முதலிப்பையன் பேரை இந்த வீட்டுக்குள் சொல்லாதே' என்று என்னைக் கண்டித்தாள். அதை மறந்து அந்தப் பையன் பேரைச் சொல்லிவிட்டேன்” என்று சுற்றிப் பார்த்துக்கொண்டே சொல்லிவிட்டுப் பிறகு “அக்கா, தெய்வ நாயகத்தின் பேரைச் சொன்னால் அம்மா ஏன் கோபித்துக் கொள்கிறாள்? நம்ம வீட்டுக்கும் அவாள் வீட்டுக்கும் எவ்வளவோ அன்னியோன் னியமாய் இருந்ததே இப்போது ஏன் அவாள் வீட்டிலிருந்து இங்கேயாரும் வருகிறதில்லை. இங்கேயிருந்து அங்கே யாரும் போகிறதில்லை? என்னைக்கூட அங்கே போக வேண்டாமென்று கட்டுப்பாடு

பண்ணிவிட்டார்களே.

மெதுவாய்க்கேட்டாள்.

அதேன்?” என்று

“அம்மா,நான் பெரியபெண்ணாகி இந்த நாலைந்து வருஷ காலமாய்த்தான் இவ்வளவு கட்டுப்பாடும். இதற்குமுன் நான் உன்னைப் போலச் சிறுபெண்ணாயிருந்தபோது தய்வ நாயகமும் நானும் எவ்வளவோ நேசமாய் விளையாடிப் பழகினோம். பிறகு நான் பெரியபெண்ணாய் வளர்ந்து விட்டபடியாலும் தெய்வ நாயகமும் பெரிய பிள்ளையாய் வளர்ந்துவிட்டதனாலும், நான் புருஷன் இல்லாதவளாய் இருப்பதனாலும், நாங்கள் இருவரும் இனிமேற் சேர்ந்து பழகப்படாது என்று அப்படிக் கட்டுப்பாடு செய்து விட்டார்கள். உன்னைப்போகவேண்டாம் என்று நிறுத்தியதற்கும் காரணங்கள் உண்டு” என்று சிலவற்றைச் சொல்லாமற் சொன்னேன்.

66

இதனை உற்றுக்கேட்ட அவள் உடனே “ அவ்வளவு கட்டுப்பாடு ஏன் செய்யவேண்டும்? தெய்வநாயகத்தையும் உன்னையும் ஒன்றாக வைத்துக் கல்யாணம் பண்ணி விடலாகாதா?” என்று என் முகத்தை நோக்கி வினாவினாள்.

ச்சொற்களைக் கேட்டதும் என் மனம் சில்லிட்டது? என் முகம் நாணத்தாற் சிவப்படைந்தது.அவள் கேட்டபடியே நடவாத என் தீவினையை நினைந்து ஒரு பக்கத்தில் மனம் உளைந்தது, அவள் கேட்டதன்மேல் உண்மை சொல்ல வேண்டியதைப் பற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/52&oldid=1582010" இலிருந்து மீள்விக்கப்பட்டது