உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

மறைமலையம் -14

மற்றொரு பக்கம் மனம் கூசியது. இப்படிப்பட்ட என் மனக் குழப்பமெல்லாம் என் தங்கை என் முகத்திற் பார்த்து.

66

“என் அக்கா பலவிதமாய் விசனப்படுகிறாய்?” என்றாள்.

66

'ஒன்றும் இல்லை அம்மா, தெய்வநாயகமும் நாமும் ஒரே சாதியாய் இருந்தால், எனக்கும் அந்தப்பிள்ளைக்கும் ஒருகால் கல்யாணம் முடிந்திருக்கக்கூடும். ஆனால், அவர்கள் சூத்திரச்சாதி, நாமோ பார்ப்பாரச்சாதி. ஆனதனால் தான் அப்படி நடக்க வில்லை.” என்றேன்.

"அப்படியானால், ஒரேசாதிக்குள்ளேதான் கல்யாணம் நடக்க வேண்டுமோ? சூத்திராளுக்கும் பிராமணாளுக்கும் கல்யாணம் நடப்பதில்லையோ? நடந்தால் குற்றம் என்ன?” என்று

கேட்டாள்.

"இப்போது ஒரே சாதிக்குள்தான் கல்யாணம் நடப்பிப்பது வழக்கமாய் இருக்கின்றது. பிராமணரைப் பார்க்கிலும் சூத்திரர் மிகத் தாழ்ந்தவர்களென்றும், அவர்களிடம் பெண் கொடுத்தல் கொள்ளலாவது அவர்களுடன் உண்ணல் கலத்தலாவது செய்வது சிறிதும் ஆகாது என்றும் நம்மவர்கள் சொல்லு கிறார்கள்” என்றேன்.

அதற்கு நுண்ணறிவுடைய என் தங்கை, “அக்கா, அக்கா இதென்ன அநியாயம்! சூத்திராளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? அவர்களுக்கும் கண் கால் தலையெல்லாம் இருக்கின்றன. நமக்கும் கண் கால் தலையெல்லாம் இருக்கின்றன. நாம் பேசுவது நடப்பது போலவே அவர்களும் செய்கிறார்கள். நாம் உண்பது உடுப்பது போலவே அவர்களும் செய்கிறார்கள். நம்மில் ஆண் பிள்ளை பெண் பிள்ளைகள் இருப்பது போலவே அவர்களிலும் இருக்கிறார்கள். நாம் வீடுவாசல்களில் வசிப்பது போலவே அவர்களும் வசிக்கிறார்கள். நமக்கென்ன இரண்டு தலையும் அவர்களுக்கு ஒரு தலையுமா இருக்கின்றன? நமக்கு நான்கு கண்ணும் அவர்களுக்கு இரண்டு கண்ணுமா இருக்கின்றன? நம்வயிற்றிற் பொன்னும் அவர்கள் வயிற்றில் மண்ணுமா இருக்கின்றன? நாம் ஆகாயத்தில் வசிக்க அவர்கள் தரையிலா வசிக்கின்றார்கள்? அப்படி ஒன்றும் இல்லையே. அப்படியிருக்க அவர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் நம்மவர் உயர்ந்தவர்கள் என்றுஞ் சொல்லுவது ஏன்?” என்று வினாவினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/53&oldid=1582011" இலிருந்து மீள்விக்கப்பட்டது