உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

25

அவள் கேள்வியின் நுட்பத்திற்காக மிகவும் அதிசயித்து “என் அருமைக்கண்மணி, நீ சொல்லியதெல்லாம் உண்மையே நம்மைப் போல் மனிதப்பிறவி எடுத்தவர்களுக்கும் நமக்கும் உடம்பளவில் வித்தியாசம் ஏதும் இல்லை; இன்பதுன்பங்கள் அனுபவிப்பதிலும் வித்தியாசம் இல்லை. ஆனால், அவர்கள் குணங்களிலும் செய்கை களிலும் அளவிறந்த பேதங்கள் இருக்கின்றன. சிலர் நற்குணம் உள்ளவர்களாய் இருக்கிறார்கள் சிலர் தீக்குணம் உள்ளவர்களாய் இருக்கிறார்கள்; சிலர் நல்ல செய்கையும் சிலர் தீய செய்கையும் உடையவர்களாய் இருக்கின்றார்கள். இவற்றினாலே தாம் முதலிற் சாதிபேதங்கள் உண்டாயிருக்க வேண்டுமென்பது எனக்குத் தோன்றுகின்றது” என்றேன்.

உடனே அவள் “அப்படியானால் நம்மவர்கள் மாத்திரம் நற் குணமும் நல்ல செய்கையும் உள்ளவர்கள்; மற்றச்சாதியார் தீக் குணமும் தீயசெய்கையும் உள்ளவர்கள் என்றல்லவா சொல்ல வேண்டும்?” என்று சொன்னாள்.

66

ல்லை, இல்லை. நம் நினைவுக்கு எட்டாத முன்னொரு காலத்தில் நற்குணமும் நற்செய்கையும் உடைய சிலர் கடவுளைத் தொழுதுகொண்டு உலகத்திற்கு நன்மை செய்து வந்தார்கள்; அதனாலே அவர்களுக்குப் பிராமணர் என்றும் பார்ப்பார் என்றும் பெயர் வந்தது. அவ்வளவு நல்லவர்களாய் இருந்த முன்னோர் களுக்குப் பிறந்தபிள்ளைகளும், அவர்களின் சந்ததியார்களும் ஏறக்குறைய நல்லவர்களாகவேயிருந்து வந்தமையால் அவர்களுக்கும் பார்ப்பார் என்னும் பெயர் பின்னும் வழங்கி வந்தது. ஆனால் இப்போதுள்ள நம் சாதியாரோ அந்த நற்குண நற் செய்கைகளினின்றும் பிசகிப்போய் விட்டார் க என்று சமாசாரப் பத்திரிகை களிலும் அடிக்கடி படித்து வருகின்றேன். நமது அகத்திற்கு வரும் சுற்றத்தார்களும் பலமுறை பேசக் கேட்டிருக்கின்றேன். மற்றச் சாதியாரைப்பற்றி நான்கேட்ட மட்டில் அவர்கள் நல்லொழுக்கத்திலும் நற்குணத்திலும் மேம்பட்டு வருகிறார்களென்று தெரிகின்றேன்” என்றேன்.

66

“அப்படியானால் மற்றச்சாதியார்களில் நல்லவர்களைப் பிராமணர் என்று சொன்னால் குற்றம் என்ன?” என்று பின்னுந் தொடர்ந்து வினவினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/54&oldid=1582012" இலிருந்து மீள்விக்கப்பட்டது